கடவுள் வாழ்த்து......12 தொல்காப்பியம்

தமிழ் நூற்கள் பெரும்பாலும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவது வழக்கம். ஆனால், தொல்காப்பியம் கடவுள் வாழ்த்தோடு தொடங்கவில்லை. அதற்குப் பின்னால் யாரும் கடவுள் வாழ்த்துப்பாடி சேர்க்கவில்லை. தமிழின் பண்டைய நூல்களில் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது.

கடவுள் வாழ்த்து......11 சீவக சிந்தாமணி

 செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்

அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து

வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்

அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 

திருத்தக்கதேவர் 

Thursday, 28 April 2022

அரசன்குடி கிராமீய சேவைத் திட்டம்

 


அரசன்குடி கிராமீய சேவைத் திட்டம் 

இந்த கிராமத்தில் மேற்கொள்ள இருக்கும் சேவைத் திட்டம் உலக சமுதாய சேவா சங்கத்தின் 240வது கிராமமாகும். திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரையில் 26வது கிராமமாகும். 

துவக்க விழாவில் இத்திட்டம் பற்றி கிராம மக்களுக்கு புரியும் வகையில் இயல்,இசை, நாடகம் கலந்து கிராமீய நடனங்களுடன் மிக சுவாரஸ்யமாக 45 நிமிடங்களில் அருமை கலைக்காரியாலயக் குழுவினர் நடத்துகின்றனர். அரசன்குடியில் இவர்கள் நடத்தும் நிகழ்ச்சி கிராமீய சேவைத் திட்ட துவக்க நிகழ்ச்சிகளில் 200வது நிகழ்ச்சியாகும். இக்குழுவினர் பற்றிய சிறு அறிமுகம் -

திருச்சி  அருமை கலைக் காரியாலயம்

அருமை கலைக் காரியாலயம் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சியில் ' கலை வழிஅமைதி நெறி' என்ற கோட்பாடு டன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கலைச் சேவை செய்து வருகிறது.

குறிப்பாக உலக புகழ் பெற்ற 'கலைக்காவிரி' யின் வழி காட்டுதல் மூலம் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தில் இணைந்து ஒரு சிறப்பு மிக்க கலைக் குழு வாக செயலாற்றி வருகிறது 



அனுபவம் மிகுந்த கலைஞர்களை கொண்டு கிராமிய நடங்களான கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மான் கொம்பு, கரகம் மற்றும் பல்வேறு வகையான நடங்களுடன் குறு நாடகங்கள், கதா காலட்சேபம் இவைகளை இணைத்து தரமான கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தி வருகிறது 

மேடை நாடகங்களில் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கருத்துள்ள நாடகங்கள் நடத்தி தமிழகத்தின் பல்வேறு கலைக் குழு க்களிடம் பரிசு களும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் குவித்து க்கொன்டு வருகிறது 

குழு வில் இடம்பெற்றள்ள கலைஞர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சி களிலும், பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நம் இந்திய கலை, கலாச்சாரம் பண்பாடு இவைகளை பறைசாற்றும் கலைத் தூதுவர்களாக,  அமைதியின் தூதுவர் களாக செயலாற்றி வருகிறது 

மே 1 ம் தேதி மாலை அரசன்குடி கிராமத்தில் இவர்கள் நடத்தும் 200வது நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள். 

அனைவரும் அரசன்குடி கிராமத்திற்கு மே 1ம் தேதி மாலை வந்திருந்து துவக்க விழா சிறப்பாக நடத்திட  வேண்டுகின்றோம். வாழ்க வளமுடன்!

கடவுள் வாழ்த்து......10 நாலடியார்


 வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்

கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து

முன்னி யவைமுடிக என்று.

வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து


இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது

கடவுள் வாழ்த்து......9

 


'மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய

வேத முதல்வன்' - என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே.'
 

பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும்; தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும்; ஆகாயம் மெய்யாகவும்; திசை கைகளாகவும்; தண்ணிய கதிர்களையுடைய திங்களும் ஞாயிறுமாகிய இரண்டும் இரண்டு கண்களாகவுங் கொண்டு; அமைந்துடைய எல்லாவுயிர்களிடத்தும் தான் பொருந்தி யிருப்பதன்றி; நில முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னுறுப்பகத் தடக்கிய வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள்; குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோம்.

இந்நற்றிணையை தொகுத்தளித்தவர் ‘பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி’ என்னும் புலவர் ஆவார்.


கடவுள் வாழ்த்து......8 - கந்தபுராணம்



 ஊன் ஆகி ஊன் உள் உயிராய் உயிர் தோறும் ஆகி

வான் ஆதி ஆன பொருளாய் மதி ஆகி வெய்யோன்

தான் ஆகி ஆண் பெண் உருவாகிச் சராசரங்கள்

ஆனான் சிவன் மற்று அவன் நீள் கழற்கு அன்பு செய்வாம்.

                                                             -கச்சியப்ப சிவசாரிய சுவாமிகள்