Monday, 23 March 2026

மரணம் முற்றுப்புள்ளி அல்ல

காலத்தால் எழுதப்பட்ட
ஆழமான கவிதை
படைத்தவனே
மீண்டும் புரட்டிப் பார்த்த
அதிமுக்கிய தொகுப்பு
பள்ளங்களின் உயரங்களை
பக்குவமாய் எடுத்துரைத்தவர்

ஆழங்களின் அழகை
உயரத்திற்கு கொண்டுவந்தவர்
மரணம் முற்றுப்புள்ளி அல்ல
என மரணத்தையே மரணிக்கச் செய்தவர்

இந்நேரம் எந்த பால்வீதியில்
என்ன எழுதிக் கொண்டிருக்கிறாரோ..?

கவிக்கோ அப்துல் ரகுமான்

No comments:

Post a Comment