சங்கத் தமிழ் வளர்த்த மதுரையை ஆண்டது பாண்டியர்கள் தானே? இருப்பினும் சோழர்களே இன்று அதிகம் போற்றப்படுகிறார்களே,பேசப்படுகிறார்களே! ஏன்? பாண்டியர்களும் தமிழர்கள் தானே? அவர்கள் எந்த அடையாளங்களையும் விட்டுச் செல்லவில்லையா?
பாண்டியர்க"ளும்" தமிழர்தானே என்று கேட்பது தவறு. பாண்டியர்கள்"தான்" முதல் தமிழ்குடி என்பதே சரி.
சோழர்கள் சரித்திரம் பிந்தையது.
பாண்டியர்கள் விட்டுச்சென்ற எச்சங்களை வைத்தே இன்று நாம் தமிழர்களும் தமிழுமே வடவரையும் சமஸ்கிருதத்தையும் விட மேலானவர்கள் என்று நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம்.
உலகில் இன்று பெரும் நாடுகள் அமெரிக்கா, சீனா, ருஷ்யா. எனவே இவற்றை பற்றி அதிகம் படிக்கிறோம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கிரேக்க, எகிப்திய, சிரிய, இந்திய, சீன நாடுகளை பற்றிய அறிதல் குறைவு.
உங்கள் தகப்பனார், பாட்டனார் பற்றி அறிந்த அளவு நீங்கள் உங்கள் முப்பாட்டன் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
No comments:
Post a Comment