Wednesday, 10 June 2026

MEMES OF THE DAY ( 10-06-2026 )











 

THIRUVANNAMALAI - SKETCH BY SILPI


 

தத்துவம் ஜோக்


 

தத்துவம் ஜோக்


 

தத்துவம் ஜோக்


 

தத்துவம் ஜோக்


 

11 THINGS YOU ARE DOING WRONG


 

MASTER CLAUDE IN 2 MINUTES


 

LEARN CLAUDE SKILLS IN 1 HOUR


 

LEARN CLAUDE IN 5 DAYS


 

Tuesday, 9 June 2026

MEMES OF THE DAY ( 09-06-2026 )













 

SRI LAKSHMI NARASIMHASAMI TEMPLE - MANGALAGIRI - SKETCH BY SILPI


 

மொக்க ஜோக்ஸ்

 

நீ வாழைப்பழம் திருடுறதை உங்க அப்பா பார்த்துட்டாரே. அப்புறம் என்ன செஞ்சாரு?

வீட்டுக்கு வந்து “தோலை” உரிச்சிட்டாரு.

😊 😄😊 😄😊

எனக்கு கல்யாணமான புதுசுலே அடிக்கடி பிறந்தகத்துக்கு போவேன் ,நீயேன் வரவே மாட்டேங்கிறே ?''

''நான் என்ன செய்றது ?

அப்பா சமையலைவிட

அவர் சமையல்

அருமையா இருக்கேம்மா !''

😊 😄😊 😄😊

*கடி டைம்*

ஒருத்தன் Maths Exam எழுதும் பொழுது Dance ஆடிட்டே எழுதுனானாம் ஏன்..?

ஏன்னா Maths-ல தான் Steps-க்கு லாம் Mark இருக்கே.


வாயாலேவடைசுடுறியா



துவாபர யுகம் முடிவடையும் காலம்

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்!

எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்!

இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின் சகோதரர்கள் நால்வரும் சரியான பதில் சொல்லத் தெரியாமல், அவனிடம் சிக்கிக் கொண்டனராம்!சேவகன் ஒருவன் மூலம் தகவல் அறிந்த தருமர் பதைபதைத்து போனார்; சகோதரர்களை மீட்பதற்கு விரைந்தார்! அரண்மனை வாயிலில், நிபந்தனை வட்டங்களுக்குள் பரிதாபமாக நிற்கும் சகோதரர்களைக் கண்டு மனம் கலங்கினார் தருமர். தன் சகோதரர்களை விடுவிக்குமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார்.

அவனோ, ”எனது நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால், தங்களது சகோதரர்களை விடுவிக்கிறேன்!” என்றான். தருமரும் ஒப்புக் கொண்டார்.

குதிரைக்காரன் முதல் கேள்வியைக் கேட்டான்: ”இந்தக் குதிரையை ஓட்டி வரும் வழியில், பெரிய கிணறு ஒன்றைக் கண்டேன். அதன் விளிம்பில் காசு ஒன்று தொங்கியது. அந்தக் காசைப் பற்றியபடி மிகப் பெரிய குன்று (மலை) ஒன்று தொங்கியது. என்ன அதிசயம்… இத்தனை பளுவிலும் காசு கிணற்றுக்குள் விழவில்லை. எப்படி?”

உடனே தருமர், ”கலிகாலம் வந்து விட்டதன் அடையாளம் இது. மக்கள் அறநெறிகளில் இருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கே தர்மம் செய்வர். பெரிய மலையளவு பாவச் செயல்கள் புரிவர். காலப்போக்கில் அவர்கள் சிறிதளவே செய்த தர்மத்தின் பலனும் நசிந்து போகும். அப்போது, மலையளவு பாவச் சுமையை சுமந்தபடி நரகில் விழுந்து உழல்வர்!” என்றார்.

”மிகச் சரியான பதில்!” என்ற குதிரைக்காரனின் முகத்தில் பிரகாசம். பீமனை விடுவித்தவன், 2-வது கேள்வியைக் கேட்டான்: ”வழியில் ஐந்து கிணறுகளைப் பார்த்தேன். நடுவில் ஒன்றும் அதைச் சுற்றி நான்குமாக அமைந்திருந்த அந்தக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. மற்ற நான்கு கிணறுகளில் நீர் குறைந்தால், நடுவில் இருக்கும் கிணறு தன்னிடம் உள்ள நீரால் அந்தக் கிணறுகளை நிரப்பும். ஆனால் நடுவில் இருக்கும் கிணற்றில் நீர் குறைந்தால், மற்றக் கிணறுகள் நீர் கொடுக்காது. இதன் பொருள் என்ன?”சற்று யோசித்த தருமர், ”இதுவும் கலியின் கோலமே! நடுவில் உள்ள கிணறு தந்தை. சுற்றி இருக்கும் கிணறுகள் மகன்களைக் குறிக்கும். மகன்களைப் பாடுபட்டுக் காப்பாற்றுவார் தந்தை. ஆனால், தந்தை தளர்வுற்ற பிறகு, மகன்கள் அவரை புறக்கணிப்பர். இதையே, அந்த ஐந்து கிணறுகளும் உணர்த்துகின்றன!” என்றார்.

இந்த பதிலும் குதிரைக்காரனுக்குத் திருப்தி யளித்தது. எனவே, இப்போது அர்ஜுனனை விடுவித்தான். அடுத்து 3-வது கேள்வியைக் கேட்டான். ”ஓரிடத்தில் குதிரையை அவிழ்த்து வைத்து விட்டு இளைப்பாறி னேன். அப்போது… பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைக் கண்டேன். இதன் கருத்து?”இதைக் கேட்டதும் தருமரின் கண்களில் நீர் வழிந்தது. வருத்தத்துடன் அவர் கூறினார்: ”கலி யுகத்தில் பெற்றோர் செய் யும் இழிச் செயல் இது! ஒரு குழந்தை பிறந்தால்… அதைக் காரணம் கூறி, உற்றார்- உறவினர்களிடம் பணம் பறிப்பர். இன்னும் சிலர், காசுக்காக குழந்தையைத் தகாதவர்களிடம் விற்பார்கள். நீ கண்ட காட்சி, இந்த அவலத்தையே உணர்த்துகிறது!”

”அருமையான விளக்கம்!” என்றபடி நகுலனை விடுவித்த குதிரைக்காரன், ”வழியில் மற்றோர் இடத்தில் சற்று கண்ணயர்ந்தேன்.

திடீரென ஏதோ சத்தம். விழித்துப் பார்த்தால், எதிரே விசித்திரமான ஒரு மிருகம்! கேட்க சகிக்காத இழிச் சொற் களைக் கூறிக் கொண்டிருந்த அந்த மிருகம், மலத் துவாரம் வழியே உணவு உட்கொண்டது! இந்த விபரீதம் உணர்த்துவது என்ன?” என்று தனது கடைசிக் கேள்வியையும் கேட்டான்.இதைக் கேட்டதும் குதிரைக்காரனாக வந்திருப் பது கலி புருஷனே என்பதை உணர்ந்து கொண் டார் தருமர்.

”குதிரைக்காரனாக வந்திருக்கும் கலிபுருஷனே! மகா பாவியான உன் கண்ணில் இதுபோன்ற விபரீத காட்சிகள் தென்பட்டதில் வியப்பு இல்லை. இனி இந்த உலகில் உனது ஆட்சிதான்! தர்மத்தின் வேர் அறுபடும். இலக்கியவாதிகள் அறநெறியைப் புறக்கணிப்பர்; புரட்சி, முற்போக்குச் சிந்தனை என்று பேசி மக்களது நல்வாழ்வை நாசமாக்குவர். பொய், களவு, வஞ்ச கம், கொலை… என்று பாதகங்கள் பெருகும்.

பேராசையும், பொறாமையும், போர் வெறியும் தலை விரித்தாடும்! வேதியர்களும் ஒழுக்க நெறி யில் இருந்து விலகி நிற்பர். ஆசிரம தர்மங்கள் சீர் குலையும். மழை பொய்க்கும். பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும். அரசர்கள், வேத வல்லுநர்களை இகழ்ந்து பேசுவர்” என்று வேதனையுடன் தழுதழுத்த தருமர், ”ஐயோ போதும் இந்த வாழ்க்கை” என்று கண்ணீர் விட்டார்.

அவரை வணங்கிய கலிபுருஷன், ”தர்மாத்மாவே! உங்கள் ஆட்சி நடைபெறும் வரை நான் இங்கு வர மாட்டேன். ஆனால், தங்களது ஆட்சி முடிவுற்றதும் நான் வந்தே தீரவேண்டும். வேறு வழியில்லை” என்றவன் சகாதேவனையும் விடுவித்தான். பிறகு, மீண்டும் தருமரை வணங்கி விட்டு, அங்கிருந்து மறைந்தான்!

மருந்து உங்கள் கையில்

 இதயம் துடிக்கிறதா??

உங்களின் எந்தக் கையை வைத்து அதைப் பார்த்திருக்கிறீர்கள்?

இடது கை பழக்கம் இருக்கிறதா?

..

இடது கைகளில் லேசான வலி இருக்கிறதா?

இடது கை விரல்கள் விறைப்பாகக் காணப் படுகிறதா?

இடது கை மணிக்கட்டு திருப்பும் போது கடினமாக இருக்கிறதா? வலிக்கிறதா?

இடது கையால் சிறிய பொருளைக் கூடத் தூக்க முடியவில்லையா?

இடது முழங்கைப் பகுதியில் குத்திக் குத்தி வலிக்கிறதா? நோகிறதா?

இடது கைத் தோள்ப்பட்டை விறைப்பாக உள்ளதா?

அடிக்கடி தோள்ப்பட்டையை உலுக்குகிறீர்களா?

இடது கையை மொத்தமாகத் தூக்க முடியவில்லையா?

இடது பக்க கழுத்து திருப்ப முடியவில்லையா? வலிக்கிறதா? வலி அதிகமாக இருக்கிறதா?

...

இதில் ஏதோ ஒன்று உங்களுக்கு இருக்கிறதா?

என்ன செய்வதென்ற குழப்பமா?

இதயத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால் இடது கையில் இப்படியான அறிகுறிகள் காட்டும் என்பது தெரியுமா? ..????

Wait...

பயம் வேண்டாம்!

இவை அனைத்துக்கும் காரணம்

நாள் முழுவதும் இடது கையில் செல்போனை வைத்துக் கொண்டு வலது கையால் தேய்ப்பதே!

..

மருந்து உங்கள் கையில். 😉

மனைவி சொல்லே மந்திரம்

 மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது! கைவிடேல்!

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,

இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,

அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,

அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,

நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,

கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,

வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,,

கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,,

சோகமே உருவாகி விட்டான்,,,

ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான்,

மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது,

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்,

"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக,

இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே,

அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,,

புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான்,

அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்,

"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே,

என்ன அது?"

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்

"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்,

இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு,

இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"

என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,

"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,

என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,,

அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்,

காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்,

கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான்,

வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்,,,

ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன,

வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து!...

அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது,,,

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி,,,

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

மனைவி வந்தாள்,,,

கண்ணீரை துடைத்தாள்,,,

அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,

கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,

விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,

கரியாத்தானே ஆகியிருக்கு,

நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"

தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.

ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். - கவிஞர் வாலி

சதா உதாசினப்படுத்திகொண்டிருந்தால்

ஆரோக்கியமா இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.

ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.

THE CODE


 

IF WE COULD SEE BEYOND TODAY


 

WORDS TO LIVE BY


 

THE RULES OF BEING HUMAN


 

THE MOUNTAIN IS YOU


 

YESTERDAY, TODAY & TOMORROW


 

LIVE A LIFE TAHT MATTERS


 

WHERE DISEASE BEGINS


 

UNIVERSE = YOU INVERSE


 

20 UNSPOKEN RULES OF LIFE


 

NOT EXPENSIVE....