Friday, 8 May 2015

வைஷ்ணவ ஜனதோ ......

மகாத்மா காந்தி அவர்களுக்குப் பிடித்த பஜன்  'வைஷ்ணவ ஜனதோ' பாடலின் தமிழ் அர்த்தம் ( நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை ) -


வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பீன்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

பிறருடைய துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;

உறுதுயர் தீர்த்ததில் கர்வங்க கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குவன் உடல்மனம் சொல் இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்

அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள் (வைஷ்)



விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அந்நிய மாதரைத் தாயென

உணர்வோம் வைஷ்ணவன் தன்நாவால்

உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும் அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்

வரைப்புற குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம் (வைஷ்)



மாயையும் மோகமும் அணுகாதவனாய்

மனதினில் திடமுள்ள  வைராக்யன்

நாயக னாகிய ஸ்ரீராமன் திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன  யாவையும் அடங்கிய சேக்ஷத்திரம்

ஆகும் அவனே வைஷ்ணவனாம் (வைஷ்)



கபடமும் லோபமும் இல்லாதவனாய்

காம க்ரோதம் களைந்தவனாய்த்

தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்

தரிசிப்பவரின் சந்ததிகள்

சுபமடை வார்கள் எழுபத்தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்

அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார் (வைஷ்)

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ
(வைஷ்ணவ்)
சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ
(வைஷ்ணவ்)
சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ
(வைஷ்ணவ்)
மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ
ராம் நாம் சூன் தாலி லாகி
சகல தீரத் தேனா தான் மான் ரெ
(வைஷ்ணவ்)
வான் லோபி நெ கபட-ரஹித செ
காம க்ரோத நிவராய ரெ
பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகொதர் தார்யா ரெ

நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

No comments:

Post a Comment