Monday 30 October 2017

ஏழாம் சுவை - நகைச்சுவை - 3

ஏழாம் சுவை - நகைச்சுவை

                                        - அறு(சு)வையானந்தா


" ஜி , உங்கள் ஏழாம் சுவையை ருசித்துப் படித்த நிறைய பேர் உங்களை தரிசிக்க வேண்டும் என கேட்டிருக்கின்றார்கள் " என்றதும்

" நிச்சயமாகப் பார்க்கலாம். அதுவும் அருட்குரலுக்கு குறைந்தது 25 சந்தா தாரர்கள்  சேர்ப்பவர்களை  நானே சென்று பார்ப்பேன் "  என்ற ஜி

" சிரிப்பு,
இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு " 


என்ற கலைவாணரின் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார். பிறகு 
" எந்த சப்ஜெக்ட்லியும் ஜோக் சொல்லலாம். மாமியார்-மருமகள் ஜோக்குகள் நிறைய கேட்டிருப்பீர்கள். இதுல புதுமையா ரெண்டு சொல்றேன் -

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்கார பெண்மணி யார் தெரியுமா ?
என ஜி கேட்க, நாங்கள் விழிக்க 

ஏவாள்எப்படி தெரியுமா?
அவளுக்குத்தான்   மாமியாரே  கிடையாதே..! "  
என ஜி சொல்ல ஒரே சிரிப்பலைகள்.

" இராமாயணத்திலே ராமன் காட்டுக்குப் போனப்ப சீதையும் உடன்சென்றாள்ஏன் தெரியுமா ? " 


என ஜி கேட்க " நீங்களே சொல்லுங்கள் " என நாம் சொல்ல 


" தசரதனுக்கு பட்டத்து ராணிகள் மூணு பேருஇது தவிர அறுபதாயிரம்னைவிகள்ஒரு மாமியாரையே தாக்கு பிடிக்க முடியாது..இதுல 
60003  பேரா...
காடுதான் பெட்டர்ன்னு  சீதை  முடிவு பண்ணிட்டா!" 

என ஜி முடிக்க எல்லோரும் விழுந்து, விழுந்து சிரிக்கின்றார்கள்.


" கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. தசரதன் தன் 60003 மனைவியர்களுடன் 

நகர்வலம் போனால் எப்படி இருக்கும்? மகளிர் பேரணிக்கு தலைமை வகித்து நடத்தி செல்வது போல் அல்லவா இருக்கும்!" 

என மேலும்  கலகலப்பு மூட்டுகின்றார் ஜி.


" இராமாயணத்திலிருந்து வேறு ஏதேனும் ஜோக் சொல்ல முடியுமா?"

 என நாம் கேட்க 

" இராமாயணத்தில் ஒரு முக்கியமான உணர்ச்சிகரமான கட்டம்.....இராவணனைக் கொன்றுவிட்டு இராமர் அசோகவனத்தில் இருக்கும் சீதையைக் காண வருகின்றார். இராவணன் தூக்கிச் சென்று பிறகு வெகுநாள் கழித்து  இருவரும் சந்திக்கின்றனர். சீதை இராமரிடம் முதலில் என்ன பேசியிருப்பாள்?"


என ஜி கேட்க 


" நல்லாயிருக்கீங்களா? எனக் கேட்டு இராமர் காலில் விழுந்து வணங்குவாள் " என நாம் சொல்ல 


" இதுல எங்க ஜோக் வருது? கொஞ்சம் இந்த காலத்து பெண்கள் மனோநிலையில் யோசித்துத்தான் சொல்லுங்களேன்" என்கிறார் ஜி.


நமக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஜி யைப் பார்க்க அவர் சொல்கிறார் -


" மானைப் பிடிக்கச் சென்றீர்களே! பத்திரமாக பிடித்து வைத்திருக்கின்றீர்கள் அல்லவா? - என்றுதானே கேட்டிருப்பாள்  "


சிரித்து, சிரித்து நமக்கு வயிற்று வலியே வந்து விடுகின்றது.

Monday 23 October 2017

ஏழாம் சுவை - நகைச்சுவை - 2

ஏழாம் சுவை - நகைச்சுவை

  - அறு(சு)வையானந்தா

நண்பர் ஒருவரின் தென்னந்தோப்பில் சுவாமி 

அறு (சு)வையானந்தாஜியின் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  'ஜி'  ( சுவாமிஜியை ஜி என இனி   அழைக்கலாம்) ஒரு சிறிய காரில் வந்திறங்கினார்.
காரில் இடப் பற்றாக்குறை காரணமாக நசுக்கப்பட்டு வந்த  அவரிடம் மன்னிப்பு கேட்டோம். அவரோ " காரில் வந்தவர்களுடன் மிக நெருக்கமாக பழக வாய்ப்பு கொடுத்தீர்களே,  அதற்கு மிக்க  நன்றி!" என சொல்லி நிகழ்ச்சியை கலகலப்புடன் ஆரம்பித்தார்.

" வாய் விட்டு சிரித்தா நோய் விட்டுப் போகும், கவலைகள் மறந்துடும் என்பதற்காக பல ஊர்ல சிரிப்பு க்ளப் ( ஹ்யூமர்  கிளப் ) ஆரம்பிச்சிருக்காங்க..சிரிப்பு யோகான்னும் சில பயிற்சிகள் தராங்க..நானும் உங்களைச் சிரிக்க வைக்க  பல விஷயங்களப் பத்திப் பேசப் போறேன். ஆயிரம் தத்துவங்களை விட ஒரு சிரிப்பு உயர்ந்ததுன்னு சொல்லுவாங்க..! முதல்ல ஒரு விஷயம்... நகைச்சுவை என்பது யார் மனதையும் புண்படுத்தக் கூடாது. மனம் விட்டு வாய்விட்டு சிரிக்கும்படியாக அமைய வேண்டும்.  . JOKES CAN NEITHER BE CREATED NOR DESTROYED. Jokes  can take different forms. ஏற்கனவே இந்த ஜோக்கை நான் கேட்டிருக்கேனே எனத் தோணலாம். புதிய சூழ்நிலையில் கேட்கும்போது அங்கு சிரிப்புதான் முக்கியம். எனவே சிரிக்க இங்கு வந்துள்ளோம். நன்றாக சிரியுங்கள்.

பல வகைகளில் உங்களை சிரிக்க வைக்க முடியும்.  வார்த்தை பிரயோகங்களில், சிலேடையாகப் பேசுவதில் என மக்களை சிரிக்க வைத்தவர்கள் காளமேக புலவர், வாரியார் சுவாமிகள், கி.வா.ஜ அவர்கள் என பலர் இருக்கின்றனர். அவர்கள் பாணியில் உதாரணமாக " தேங்காய் இளசாய் இருந்தா அது  வழுக்கை. ஆனா மனுஷனுக்கு வயசானா வருவது வழுக்கை " அப்படின்னா சொன்னா சிரிப்பு வருகிறது அல்லவா.  இந்த வழுக்கையை இன்னும் வேடிக்கையாக " கடவுளுக்கு அடிச்சா மொட்டை.. கடவுளே எடுத்துக்கிட்டா அது சொட்டை" என பஞ்ச் டயலாக் சொல்லலாம்."

வந்திருந்தவர்கள் சிரித்து மகிழ்கின்றனர். ஒருவர் " ஜி, புதுமாதிரியான சிலேடை ஒன்று சொல்லுங்களேன்" என  கேட்கிறார்.

" ஒ! சிலேடைக்கடி ஒன்று சொல்கிறேன். ஒரு மனவளக்கலை அன்பர் என்னிடம் வந்து ' எனக்கு தவம் நன்கு சித்தியாகிவிட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது' எனக் கேட்டார். .நான்  ' உங்கள் வீட்டிற்கு பாம்புகள் நிறைய வரு கின்றனவா' எனக் கேட்டேன். அவர் பயந்துவிட்டார். நான் சொன்னேன் - " நீங்கள் நன்கு தவம் செய்பவராய் இருந்தால் உங்கள் முகத்தில் தவக்களை தெரியுமல்லவா... அதைப் பிடிக்கத்தான் பாம்புகள் வரும்!
தவ களை  - தவக்களை  இதுதான் சிலேடைக்கடி." 

- தொடரும்