Tuesday 26 September 2023

மகரிஷி அவர்களுடன் ……,7




1980ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டு ! மஹரிஷியுடன் மூன்று நாட்கள் முழுதும் கழித்த நாட்கள்!
பிப்ரவரி மூன்றாம் வாரம் கடலூரிலிருந்து பஸ்ஸில் திருமதி இந்திரா குப்தா ( ஆழியாரில் அருளரங்கம் கட்ட நிதி உதவியவர் ), டோனி என்கின்ற அமெரிக்க அன்பர், எனது ஆசானும் , வழிகாட்டியும், நெறியாளருமான முனைவர் நாகராசனும் மேலும் உதவிக்காக சென்னையில் மகரிஷிக்கு அரும் தொண்டாற்றிக்கொண்டிருந்த ஓமனா அவர்களும் திருச்சி வந்தனர். மூன்று நாட்களும் மாலையில்தான் மகரிஷிக்கு நிகழ்ச்சிகள் இருந்ததால் அவருடனும், மற்றவர்களுடனும் நிறைய உரையாட முடிந்தது.
இரண்டாம் நாள் மதியம் திருமதி இந்திரா அவர்களுக்கு குதிரை வண்டியில் பயணம் செய்யவேண்டுமென ஆசை ஏற்பட்டு எங்களிடம் தெரிவித்தார்கள். உடனே காந்தி மார்க்கெட் பகுதியிலிருந்து நல்ல குதிரை வண்டி கொண்டு வந்து அதில் மகரிஷி அவர்களும் இந்திரா அவர்களும் மாத்திரம் ( டோனி ஆறடி உயரம், ஆஜானுபாகுவாக இருந்ததினால் குதிரை வண்டிக்காரன் அவரை வண்டியில் ஏற அனுமதிக்கவில்லை ). வசதியாக செல்வதற்காக மகரிஷியும், இந்திராவும் மாத்திரம் பயணம் செய்தனர். ஒரு தகப்பன்போல இந்திராவிடம் மகரிஷி காட்டிய பாசம் இன்னும் நினைவில் உள்ளது. குதிரை வண்டியில் அகண்ட காவிரி பாலத்தைக் கடந்து திருவானைக்காவல் கோவிலுக்கும் இந்திராவை அழைத்துச் சென்றார் மகரிஷி அவர்கள்.

1980ம் ஆண்டுதான் கலர் போட்டோக்கள் இந்தியாவில் அறிமுகமான சமயம். இந்திரா அவர்களிடம் கலர் போட்டோ பிலிம் ரோல் ஒன்றுதான் இருந்தது. அதனை அவர் மிக சிக்கனமாக பயன்படுத்தினார். திருச்சியில் பர்மா பஜாரில் தேடியும் கலர் ரோல் கிடைக்கவில்லை. 

அந்த மூன்று நாட்களில் அவர் நான்கைந்து போட்டோக்கள்தான் எடுத்தார்.அதில் ஒன்றுதான் கீழே  உள்ள போட்டோ -

மகரிஷி அவர்கள் இந்திரா குப்தாவுடன் - பின்புறம் குதிரை வண்டி !

(நடுவில் இருப்பவர் யாரெனத் தெரியவில்லை) 

மகரிஷியுடன் நாங்கள் எல்லோரும் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ தேடி எடுத்து அனுப்புவதாகச் சொன்னார்கள். 



No comments:

Post a Comment