Saturday, 12 July 2025

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்..

 .


*உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு.

அஃது எந்த இடம் தெரியுமா?

*கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* *அவனைக் காத்து நின்றது.*

*அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* .

*கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.

அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,* *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான்.

*கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை.

*கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.*

*கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.*

*கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்* .

*கண்ணன்* மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான்

*"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் "* என்று *வரம்* தந்தான்.

*இறைவனைக்* காண வேண்டும், *முக்தி* அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள்.

*கர்ணன் இறைவனைக்* காண வேண்டும் என்று *தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று மெனக்கெட வில்லை* .

*இறைவன்* அவனைத் *தேடி வந்தான்.* கேட்காதபோதே *விஸ்வரூப தரிசனம்* தந்தான். அவனைக் *கட்டி அணைத்துக்* கொண்டான். *கண்ணீர்* விட்டான். *செல்வம், ஈகை, முக்தி* என்று எல்லாம் கொடுத்தான்.

*இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.*

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

*கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்* .

*எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.*

*உலகளந்த பெருமாள்,* அவனிடம் *கை நீட்டி நின்றார்.*

*ஈகை* எவ்வளவு பெரிய நற்செயல் !

*இயன்றதைசெய்வோம்*

*இல்லாதவர்க்கு.*🙏🌹

No comments:

Post a Comment