அள்ள அள்ள குறையாத ரகசியங்கள் பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்ட வருடம் கிபி 1010 வருடம்.
அதன்பின் சுமார் நூறு வருடங்கள் சோழர்கள் ஆட்சி நீடித்தது!!
அதன் பின் பாண்டியர்களுக்கு கீழ் தஞ்சை வந்தது!
அதன் பின் வெவ்வேறு ஆட்சியாளர்கள் மாறினார்கள்!
ஒரு கட்டத்தில் யார் பெரிய கோயிலை கட்டியது என்றே தெரியவில்லை!
சுமார் 1400 வருடத்தில் இருந்து 1886 வருடம் வரை சுமார் 500 வருடங்கள் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த,ஆட்சி செய்த யாருக்குமே பெரிய கோயிலை கட்டியது யார் என்றே தெரியவில்லை!
தமிழகத்தில், தஞ்சையில் வாழ்ந்து ஆறு தலைமுறை மக்களுக்கு பெரிய கோயில் யார் கட்டியது,என்ன சிறப்பு என்றே தெரியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
பலரும் சங்க காலத்தில், அதாவது ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகால சோழன் தான் பெரிய கோயிலைக் கட்டியதாக நினைத்து இருந்தார்கள்.
இடையில் பூதம் கட்டிய கோயில் என்ற வதந்திகளும்,பெரிய கோயில் வௌவாவல்களின் கூடாரமாக மாறியது.
கிபி 1886 வருடம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹல்ட்ஸ் என்பவரைச் சென்னை மாகாண அரசு தலைமை கல்வெட்டு வல்லுநராக நியமித்து இருந்தது. அவர் மாமல்லபுரத்தில் உள்ள பஞ்ச ரதங்கள் என்ற பல்லவ மன்னர்களின் கல்வெட்டுகளைப் படிக்க முயன்று கொண்டு இருந்தார்.
அப்போது பள்ளி ஆசிரியராக இருந்த வி.வெங்கையா என்பவர் ஹல்ட்ஸ் என்பவர் கல்வெட்டுகளை படிக்க முயல்வதை கண்டு ஆச்சர்யப்பட்டார்.
பிறகு ஆசிரிய பணியை விட்டு அவருடன் இணைந்து கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.
அப்போது தான் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது கரிகாலன் அல்ல, ராஜ ராஜ சோழன் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்தியாவில் இருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கும் மேலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அவை பெரும்பாலும் தமிழில் இருப்பதையும் தமிழ் மன்னர்களின் ஆட்சி முறை,நிர்வாகம்,தெய்வ பக்தி,வீரம் இவற்றை கண்டு ஜெர்மானியரும்,வெங்கையாவும் அசந்து போனார்கள்.
அதன்பிறகு கல்கி கிருஷ்ணமூர்த்தி சோழ வரலாற்றை கொஞ்சம் கற்பனைகளை கலந்து 1950 வருட வாக்கில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாக எழுதினார்.
இப்போது நாம் பெரிய கோயிலை,ராஜராஜசோழனை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம்!

No comments:
Post a Comment