பொழுத விடிய விட மாட்டீங்கறாங்கப்பா...
அண்ணாச்சி... காலண்டர்ல நம்ம ராசிக்கு என்ன போட்டிருக்கு...?
தண்டனைன்னு போட்டிருக்கு தம்பி...
நாம யாரு வம்புக்கும் போறதில்ல... தும்புக்கும் போறதில்ல... நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போயிர்றது... நமக்கு யாரு தண்டனை தரப் போறாங்க? எல்லாம் மூட நம்பிக்கை அண்ணாச்சி.
சரி சரி, நாம வந்த வேலையை பாப்போம். ரெண்டு பால் பாக்கெட் கொடுங்க.
ரெண்டு பால் பாக்கெட், அப்புறம் தம்பி...
அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம் அண்ணாச்சி?
சொல்லுங்க தம்பி.
எங்க வீட்டம்மா வந்து ரவை கேட்டா, காலியாயிடுச்சின்னு சொல்லிடுங்க அண்ணாச்சி.
நீங்க லேட்டுங்க தம்பி.
ஏன் அண்ணாச்சி?
உங்க வீட்டம்மா நேத்து நைட்டே ரவை வாங்கிட்டு, நான் ரவை வாங்குனத எங்க வீட்டுகாரர் கிட்ட சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டுப் போச்சி.
அப்ப நேத்து நைட்டே "தண்டனை" உறுதியாயிடுச்சா? நான் தான் டூ லேட்டா...!?
No comments:
Post a Comment