Wednesday, 31 December 2025

2025ம் ஆண்டின் நிறைவு பதிவு

 



என் இனிய ஞானவயல்வலைப்பூ நண்பர்களே / அன்பர்களே

இது இந்த 2025ம் ஆண்டின் நிறைவு பதிவு.

இது இந்த வலைப்பூவின் 26686வது பதிவு. கடந்த 14 ஆண்டுகளில் சில ஆண்டுகள் மிகக்குறைவான பதிவுகளே பதிப்பித்துள்ளேன். சென்ற இரண்டு ஆண்டுகளில் நிறைய படித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் " Google , Quora , Pinterest, WhatsApp மற்றும் பல பத்திரிகை இதழ்கள், புத்தகங்கள் " என 19619 பதிவுகள். பெரும்பாலானவை cut & paste தான். ஞானதானம் செய்த அனைவருக்கும் நன்றி

இந்த 2026ம் ஆண்டு பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் எனது அனுபவங்கள் பற்றி அதிகமாக இருக்கும். நான் படித்த பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக எழுதவும் எண்ணியுள்ளேன்.

ஞானவயல் வலைப்பூ இதுவரை 885300க்கும் மேற்பட்ட pageviews பெற்றுள்ளது.

USA , ஜெர்மனி, சிங்கப்பூர், பின்லாந்து, ஹாங்காங், ஆஸ்திரேலியா, UK , பிரான்ஸ் , ஜப்பான், நெதர்லாந்து, சைனா, ருமேனியா, ஆஸ்திரியா, இஸ்ரேல், கனடா, போலந்து , போர்ச்சுகல், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ் தெரிந்த / தெரியாத அன்பர்கள் பலமுறை ஞானவயலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் இனிய 2026ம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தினரும் இந்த புத்தாண்டில் வாழ்வின் எல்லா இன்பங்களையும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ இறையருளும், குருவருளும் enrum துணை நிற்குமாக ! வாழ்க வளமுடன்!





No comments:

Post a Comment