Showing posts with label ஜோக். Show all posts
Showing posts with label ஜோக். Show all posts

Friday, 17 April 2026

பழைய கடி ஜோக்குகள்

 


1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..!

2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!

3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!

4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!

5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! "நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .

6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா.....

காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....."

8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே

நல்லாவா இருக்கு.?

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!

9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…

நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”

11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”

12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு

எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!

13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!!

ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..!

சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..!

சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.

14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ?

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!

முதல்ல அவரை விடுதலை செய்ங்க...!

Sunday, 29 March 2026

தேர்தல் வாக்குறுதிகள்

இலவசம் ! இலவசம் !

 அள்ளி விடுறாங்க இலவசம் !

 ஐயா அம்மா வாங்கிக்கோங்க ! இலவசம் !


"நாங்க பிரிட்ஜ் கொடுப்போம்………..

நாங்க அதுக்குள்ள வைக்கிற பழம், சாப்பாடு எல்லாம் கொடுப்போம்…………

நாங்க இலவச சலவை பொடி கொடுப்போம்……………

நாங்க இலவசமா சலவை எந்திரமே கொடுப்போம்………………

நாங்க இலவச காய்கறி தருவோம்……………….

நாங்க அதை நறுக்கியேதருவோம்……………….

நீங்க கடைகண்ணிக்கே போக வேணாம் !!நாங்க இருக்கோம்!!!!!!

கடைக்குள்ளே உங்களுக்கு வீடு கட்டி தருவோம்!!!!!!

நாங்க வீட்டுக்கு வீடு சமையலுக்கு ஆட்கள நியமிப்போம்……….

நாங்க பாத்திரம் கழுவ ஆட்களை நியமிப்போம்……………

நாங்க உங்க வீட்டையே கழுவி சுத்தமாக்கி தருவோம்……………..

நாங்க ஆறுமாசத்துக்கு ஒருதடவை பெயின்ட் பண்ணி தருவோம்……………

நாங்க இலவசமா பைக் தருவோம்……………..

நாங்க இலவசமா பெட்ரோலும் பராமரிப்பும் தருவோம்………………..

நாங்க உங்கள வருஷம் ஒரு தடவ டூர் அனுப்பி வைப்போம்………………

நாங்க வேலை வெட்டில் இல்லாதவங்கள டூர்லே வைப்போம்………

நாங்க பெண்களுக்கு மாசம் ஒருவாட்டி பியூட்டி பார்லர் அனுப்புவோம்…….

நாங்க அரசுசார்புல பியூட்டி பார்லரே வச்சி தருவோம்………

நாங்க இலவசமா பூ தருவோம்…………

நாங்க இலவசமா ஜடை பின்னி விடுவோம்…………..

வருஷம் 3 இலவச பட்டு…….

மாசம் மாசம் சுடிதார் செட்டு……….

பஸ்ஸுல உங்க எல்லாருக்கும் இலவசம்………..

பிளைட்லே டிக்கெட் இலவசம், ……..ஈரானுக்கு கூட போகலாம்….

வேலை இல்லாதவனுக்கு கையில காசு வாயில சோறுசோறு வேணுமா குவார்ட்டர் பாட்டிலும் பிரியாணியும் வேணுமா?……….

பெண்கள் வளர்க்கும் ஆடு மாடு நாய்குட்டிக்கெல்லாம் இன்சூரன்ஸ்……….

பெண்களே உங்கள் கணவருக்கெல்லாம் இலவச இன்சூரன்ஸ்…….

பெண்கள் மகப்பேறுக்கு ஒரு வருஷம் லீவ்……….

பேரன் பேத்தி கல்யாணம் வரைக்கும் மொத்தமா லீவ்……..

சாகுற வரைக்கும் காசு கொட்டுவோம்………

செத்த பின்னாடியும் சமாதில கொட்டுவோம்………

உங்களுக்கு செருப்பா இருப்போம்………

உங்கள் செருப்பே எங்க தோள் மேலதான் இருக்கும்…….

இலவச கரண்ட் தருவோம்…………

இலவசமா மின் உற்பத்தி காத்தாடி சோலார்னு தருவோம், ஏன் அணுவுலையே தருவோம் …………..

இலவசமா பால் தருவோம்……

இலவசமா பசுமாடு தருவோம்

இலவசமா ஆளுக்கொரு நாடே தருவோம்"

ஜோக்ஸ்


 

Monday, 9 March 2026

கணவன் - மனைவி ஜோக்


கணவன் ஆபீஸில் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருக்க... அப்போது மனைவி call செய்கிறார்...

​மனைவி : ஏங்க... ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்!

​கணவன் : (பதட்டமாக) என்னம்மா? என்னாச்சு? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?

​மனைவி : எல்லாரும் நல்லா இருக்காங்க. ஆனா, ஒரு சின்ன accident ஆயிடுச்சு...

​கணவன் : (பயந்துபோய்) விபத்தா? என்ன சொல்ற? யாருக்கு என்னாச்சு? சீக்கிரம் சொல்லு!

​மனைவி : அது... உங்க அம்மா கொடுத்த "ஸ்பெஷல்" ஊறுகாய் ஜாடி இருக்குல்ல? அது உடைஞ்சுடுச்சு!

​கணவன் : (பெருமூச்சு விட்டு) அடிப்பாவி! இதுக்குத்தான் விபத்துன்னு சொல்லி பயமுறுத்துனியா? சரி விடு, வேற ஜாடில மாத்தி வை.

​மனைவி : அது எப்படிங்க முடியும்? ஜாடி உடையல... அது உங்க லேப்டாப் மேல விழுந்து உடைஞ்சுடுச்சு!

​கணவன் : (அதிர்ச்சியில்) என்னது!! லேப்டாப் மேலயா? வேலை செய்யுதா இல்லையா?

​மனைவி : லேப்டாப் நல்லாதான் இருக்கு. ஆனா, கீ-போர்டு ஃபுல்லா இப்போ 'மாங்காய் ஊறுகாய்' வாசனை அடிக்குது. டைப் பண்ணா கை எல்லாம் பிசு பிசுக்குது!

​கணவன் : ஐயோ! அது ஆபீஸ் லேப்டாப்மா... இப்போ நான் என்ன பண்றது?

​மனைவி : கவலப்படாதீங்க, நான் அதை சரி பண்ணிட்டேன்.

​கணவன் : (கொஞ்சம் நிம்மதியாக) அப்படியா? எப்படி கிளீன் பண்ண?

​மனைவி : "வாஷிங் மெஷின்ல" போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்தேன். இப்போ ஊறுகாய் வாசனையும் போயிடுச்சு, லேப்டாப்பும் புதுசு மாதிரி "பளிச்"னு இருக்கு!

​கணவன்: (அதிர்ச்சியில் உறைந்துபோய்) வாஷிங் மெஷின்லயா?! அம்மா தாயே... இப்போ அது on ஆகுதா?

​மனைவி : அதான் எனக்கும் புரியல... ஆன் பண்ணா ஸ்க்ரீன்ல மீன் நீந்துற மாதிரி கலர் கலரா வருது. ரொம்ப அழகா இருக்குங்க!

​கணவன் : (அழுது கொண்டே) அது மீன் இல்லம்மா... என் வேலை போறதுக்கான அறிகுறி! நான் இப்போவே வீட்டுக்கு கிளம்பி வரேன்.

​மனைவி : நிஜமாவா? வரும்போது அப்படியே ஒரு புது லேப்டாப் வாங்கிட்டு வந்துடுங்க. இதுல டிசைன் நல்லா இல்லை!

​கணவன் : (மனதுக்குள்) லேப்டாப் இல்லம்மா, எனக்கு ஒரு "மனநல டாக்டர்" தான் இப்போ தேவை!


கணக்கு வாத்தியார்


 யாரோ ஒருத்தன் கணக்கு வாத்தியாரை பிடிக்காதவன் தான் இதை செய்து இருக்கணும்!

தமிழ் வாத்தியார் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் எப்படி கத்துவார்!!!

காப்பாற்றுங்கள்!!! காப்பாற்றுங்கள்!!!

ஆங்கில வாத்தியார் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் எப்படி கத்துவார்!!!

ஹெல்ப்!! ஹெல்ப் மி!!

கணக்கு வாத்தியார் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் எப்படி கத்துவார்!!!

எண்ணை காப்பாற்றுங்கள் !!

எண்ணை காப்பாற்றுங்கள் !!

அதான் இல்லை பசங்க நாங்க தான் கத்துவோம்!!

என்னடா சொல்றீங்க கணக்கு வாத்தியாரை அம்புட்டு பிடிக்குமா!!

இல்லை பிராப்ளம் solved என்று கத்துவோம்!!!

Thursday, 12 February 2026

ஒரு குடும்ப கணவனா வாழ்வது....

ஒரு குடும்ப கணவனா வாழ்வது எம்புட்டு பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கு !

சனிக்கிழமை சுண்டல் குழம்புல கொஞ்சம் லைட்டா உப்பு அதிகமாகிடுச்சு. பேசாம சாப்டு கம்முனு இருந்திருக்கணும். சாப்டுகிட்டே ஆபீஸ்லருந்து வூட்டம்மாவுக்கு போன் பண்ணி கொஞ்சம் ஓவராவே சவுண்டு வுட்டுட்டேன்....

இன்னிக்கி சாம்பார், வாழைத்தண்டு, உருளை வறுவல், மல்லித்துவையல் எல்லாமே செம டேஸ்ட்....

கரெக்ட்டா லன்ச் டைம்ல போன் பண்ணி, "சாப்டியா....?" னு கேட்டுச்சு எங்கூட்டு அம்மணி

"சாப்டுகிட்டு இருக்கேன்மா"

"நல்லாருக்கா...?"

"செமையாருக்கு. ஏன்..?"

"இல்ல... அன்னிக்கி உப்பு அதிகம்ன ஒடனே போன் பண்ணி கத்த தெரிஞ்சுச்சில்ல... இன்னிக்கி எல்லாமே நல்லாருக்குதுல்ல... ஒரு போன் பண்ணி பாராட்ட வாய் வரலியே... ஏன்...?"

"சாப்டுகிட்டு இருக்கேன்மா..."

"அன்னிக்கி மட்டும் சாப்டுகிட்டு இருக்கும் போதே போன் பண்ண தெரிஞ்சுச்சில்ல.... இன்னிக்கி முடிலயா... ஆங்..."

"சாப்டுட்டு மொத்தமா பாரட்டலாம்னு..."

"ஒரு ஈர வெங்காயமும் வேணாம்... போனை வை... வூட்டுக்கு வா இருக்கு ஒனக்கு..." னுட்டு கோவமா போனை கட் பண்ணிருச்சு...

ஈவினிங் வூட்டுக்கு போனா என்னவெல்லாம் சந்திக்க வேண்டியதா இருக்குமோ தெர்லயே இறைவா...!!!!!!!!!!!


Saturday, 7 February 2026

வீட்டில் எலித்தொல்லை

 வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

"வீட்ல எலி பொறி இருக்கா..?"

"இருக்கு..."

"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார்.

"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல....

அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".

மனைவி கணவனுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ்.....

 மனைவி கணவனுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பினாள்!

மனைவி - என்னங்க வரும்போது மறக்காமல் நாளைக்கு சாண்ட்விச் செய்ய நம்ம ரெகுலரா வாங்கும் பேக்கரியில் இருந்து bread 🍞 வாங்கிட்டு வாங்க! அப்புறம் உங்க தோழி ரோசி உங்களுக்கு ஹாய் சொல்ல சொன்னாங்க!

கணவன் - ஆமாம் அது யாரு ரோசி!

மனைவி - அது யாரும் இல்ல! நீங்க என் மெசேஜை படிக்கிறீங்களா என்று பார்த்தேன்!

கணவன் - ஆனா ! உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? நீ சொல்லும் ரோசி கூட தான் நான் இருக்கேன்! இப்ப!

மனைவி - ( கோபத்தில் பெரு மூச்சு விட்டபடி ) ஆமா இப்ப எங்க இருக்கீங்க நீங்க!

கணவன் - வேறு எங்கே! நம்ம ரெகுலரா bread 🍞 வாங்கும் பேக்கரியில் தான் காஃபி சாப்பிட்டு கொண்டு இருக்கோம்!

(மனைவி அடித்து பிடித்து கொண்டு பேக்கரிக்கு வந்து சேர்ந்தார்!)

மனைவி - ஹலோ! என்னங்க நான் இப்ப பேக்கரியில் தான் இருக்கேன்! நீங்க எங்க இருக்கீங்க!

கணவன் - லூசு! நான் ஆஃபீஸ்ல இருக்கேன்! நீ என்ன பண்ற அப்படியே மறக்காமல் பிரெட் 🍞 வாங்கிட்டு போய் விடு!

மனைவி - !!!!!!!!

வாயை Control பண்ணுறது

 போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...

முதல் நாள் :

எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control பண்றதை விட.,

மனசை Control பண்றது கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது

வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..

இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..

ஆனா அந்த கார்...

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,

Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,

பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..

மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..

அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..

ஆனா எங்க குருவோ..,

" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "

அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..

அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..

அப்ப குரு பார்த்துட்டார்

என்ன கேட்டேனா.. ?

" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?

நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "

இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜