நீரும் இறைவனும்
நீரின்றி அமையாது உலகு என்கிறது திருக்குறள். சர்வதேவ தாஸ்வரூபம் என்கிறது வேதம். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்றெல்லாம் நீரைப் பலரும் புகழ்வதைக் கேட்டிருப்பீர்கள்.
ஆன்மிக சடங்குளில் சங்கல்பம் செய்வது, தாரை வார்ப்பது போன்ற பல விஷயங்களில் நீரின் துணை இருக்கும். நீர் என்பதற்கே இறைவனின் சாட்சியாக என்றே அர்த்தம்.
நீரையும் கடவுளோடு பொருத்திப் பார்க்கலாம். மேலிருந்து கீழே வரும் தன்மையுடையது நீர். அவதாரங்களுக்காக மேலிருந்து கீழே (பூமிக்கு வந்து) திருவிளையாடல்களை நிகழத்துவதால் நீரையும் கடவுளோடு பொருத்திப் பார்க்கலாம்.
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் நிறம் மாறும் தன்மையுடையது. இதேபோல் எடுக்கப்படும் அவதாரத்துக்கு ஏற்ப அவரின் குணாதிசயத்தை மாற்றுவார்.
நிறம், மணம், குணம் அற்றது நீர். இறைவனுக்கும் இது பொருந்தும்.
மண்ணில் உணவின் உற்பத்தியைப் பெருக்குவது நீர்தான். உணவுச் சுழற்சிக்கு நீரே ஆதாரமாகிறது. உயிர்களின் சுழற்சிக்கு இறைவனின் அருளே ஆதாரமாகிறது.
பாத்திரத்தின் கொள்ளவுக்கு ஏற்ப நிறையும் நீரைப் போல, பக்தியின் அளவுக்கேற்ப இறைவன் படி அளக்கிறான். நிலத்தின் பேதமின்றி ஊர்வது நீர். உயிர்களில் பேதமின்றி அனைத்துக்கும் அருள்பவன் இறைவன்.
No comments:
Post a Comment