அரையாண்டு தேர்வு முடிந்து அன்று திருத்திய கணக்கு விடைத்தாள் கொடுக்கும் நாள்!
நம்ம குமாருக்கு ஒரே டென்ஷன் ! பின்ன இருக்காதா! எப்படியும் ஃபெயில் ஆகிவிடுவோம் என்று தெரியும் !
ஆனாலும் கொஞ்சம் கௌரமாமான ஃபெயில் என்றால் நன்றாக இருக்கும் என்று குல சாமியை வேண்டிக் கொண்டு இருந்தான்!
முதலில் கணக்கு தேர்தலில் ஃபெயில் ஆன மூன்று மாணவர்களை கூப்பிட்டு பிரம்பால் ஆளுக்கு நாலு அடி கொடுத்து தாள்களை கொடுத்தார்!
என்ன ஆச்சரியம் குமார் ஃபெயில் லிஸ்ட்டில் இல்லை!
அவனால் அதை நம்ப முடியவில்லை!
அடுத்து ஜஸ்ட் பாஸ் மாணவர்களின் விடைத்தாள்கள் !
அதிலும் குமார் தாள் இல்லை!
அடுத்து 60, 70, 80, 90 என்று போய் கொண்டு இருக்க
அதிலும் நம்ம குமாரின் பெயரும் கூப்பிட வில்லை! அவனின் தாளும் வரவில்லை!
கடைசியாக 99 மார்க் வாங்கிய பையன் விடைத் தாளும் கொடுத்தாயிற்று!
மீதம் 100 மார்க் மற்றும் குமார் தான் பாக்கி!
முழு வகுப்பும் அமைதி எல்லாரும் குமாரையே பார்க்க!
இப்ப கணக்கு வாத்தியார்!
" யாரோ ஒரு மூதேவி! விடைத்தாளில் பெயர் எழுதாமல் இருக்கான்! அதுவும் முட்டை மதிப்பெண்! " என்று சொல்ல
நம்ம குமார் மயக்கம் போட்டு விழுந்தான்! வகுப்பில்!
No comments:
Post a Comment