Showing posts with label மனிதன். Show all posts
Showing posts with label மனிதன். Show all posts

Wednesday, 3 September 2025

தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்:


தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்: 



1. உப்புமூட்டை மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர்.

2. கொசு மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள்.

3. ஆதிக்க மனிதர்கள்: இந்த நபர்கள் பெருமையை தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள்.

4. முதலை மனிதர்கள்: இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கி பழகுவார்கள், மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது அந்த தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

5. பச்சோந்தி மனிதர்கள்: இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

6. கனவுக் கொலையாளிகள்: இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.

7. குப்பை மனிதர்கள்: இந்த நபர்கள் எதிர்மறை மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்மறையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நேர்மறையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும்.





Monday, 6 October 2014

மனிதன்....6




வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் 
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்

நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ


வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
 மனிதன் மாறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

Thursday, 25 September 2014

Wednesday, 24 September 2014

மனிதன்....3


மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை .

 1.தற்பெருமை கொள்ளுதல்
 
2.பிறரைக் கொடுமை செய்தல்

 3.கோபப்படுதல்
 
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, 
அதற்கேற்ற பாவனை செய்தல்.
 
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்

 6.பொய் பேசுதல்
 
7.கெட்ட சொற்களைப் பேசுதல்

 8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை

 9.புறம்பேசுதல்

10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்

11.பாரபட்சமாக நடத்தல்

12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்

13.பொய்சாட்சி கூறுதல்

14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்

15.வாக்குறுதியை மீறுதல்

16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்

17. குறை கூறுதல்

18.வதந்தி பரப்புதல்

19.கோள் சொல்லுதல்

20.பொறாமைப்படுதல்

21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.

Monday, 22 September 2014

மனிதன்....1

மனிதனின் ஆறு குறைகள்




  • 1.மற்றவற்றை ஒடுக்குவதால், தான் உயர முடியும் என்ற பேதமை.

  • 2.மாற்ற முடியாதவற்றைப் பற்றியும், திருத்த முடியாதவற்றைப் பற்றியும் கவலைப்படுவது.

  • 3.நம்மால் செய்ய முடியாத ஒன்றை வேறுயாராலும் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுவது.

  • 4.அற்ப விஷயங்களைக் கூட விட்டுக் கொடுக்க முடியாமல் இருப்பது.

  • 5.மனதையும் அறிவையும் பக்குவப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.

  • 6.நாம் வாழ்வது போலவோ, நமது விருப்பு வெறுப்புப் போலவோ பிறரையும் இருக்கத் தூண்டுவது. இக்குறைகளைச் சரிப்படுத்திக் கொண்டால் மனிதன் நிம்மதியாக வாழலாம்.