எனது இடப்புறம் இருப்பவர் Dr லக்ஷ்மணன், இடப்புறம் போர்டுக்கு அப்பால் நிற்பவர் Dr பெருமாள் மற்றும் எனது வலப்புறம் இருப்பவர் Dr ரபீந்தரநாத் |
( அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்).
கடந்த வாரம் எனது Ph D ஆய்வு தொடர்பாக ஆழியாரில் நான்கு நாட்கள் இருந்தபோது Dr லக்ஷ்மணன் அவர்களின் ஆய்வுகளை மேலும் அறிந்தேன். இப்போது அவர் இன்னும் விஸ்தாரனமாக ஆய்ந்து கொண்டிருக்கின்றார்.
சில பாத்திகளில் உள்ள வெண்டை செடிகளுக்கு தண்ணீர் குறைவாக விட்டு வாழ்த்து மாத்திரம் சொல்லி வருகின்றார். சில பாத்திகளில் உள்ள செடிகளுக்கு இயற்கை உரம் மற்றும் வாழ்த்து அளித்து விளைவுகளை ஆராய்ந்து வருகின்றார்.
அந்த செடிகளிடம் Dr சென்று கைகளினால் வாழ்த்துகளை செலுத்தும்போது வாழ்த்து பெறும் செடிகளின் இலைகள் அசைந்து கொடுப்பதைக் கண்டேன்.
பலமுறைகள் இந்த ஆய்வினை செய்து பார்த்ததில் வாழ்த்தினால் வரும் இந்த மிகுந்த அதிகப்படி விளைச்சல் மிகவும் மலைக்க வைக்கின்றது, பிரமிப்பூட்டுகின்றது என்கிறார்.
பல்வேறு கருத்தரங்குகளில் இந்த ஆய்வு பற்றி இவர் பேசியபோது நல்ல வரவேற்பு இருந்ததாம். தற்போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு ஆராய்ச்சி நெறிமுறைகள் படியும், பல்வேறு மாணவர்கள், பேராசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக Dr சொன்னது -
செடிகளை வாழ்த்தும்போது அங்கு உள்ள மரத்தில் வாழும் ஓர் ஆந்தைக் குடும்பத்திற்கும் Dr வாழ்த்து கூறி அந்த ஆந்தைகளுடன் இவர் நட்பு கொண்டுள்ளார்! இவர் செடிகளுக்கருகே செல்லும்போதே குரலெழுப்பி இவரை அழைக்கின்றன.
Dr லக்ஷ்மணன் ஏற்காட்டில் இருந்தபோது இவர் பராமரித்த தேனீக்கள்
இவரிடம் காட்டிய அன்பினையும், வரும் விருந்தினர்களுக்கு அவைகள் வட்டமிட்டு காட்டிய வரவேற்பினையும் பலரும் பார்த்து வியந்திருக்கின்றனர்.
வெகுவிரைவிலேயே உலகளவில் பேசப்படப்போகும் இந்த ஆய்வினை செய்து வரும் Dr லக்ஷ்மணன் வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment