தியானம்
- மஹாகவி பாரதியார்
சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால்
என் உள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம்
தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுற மொழி தல், நயவஞ்சனை,
நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்
பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாது தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள்
பெற முயல்வேன். இல்லாவிடில் விதிவசமென்று
மகிழ்ச்சியோடு இருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல்,
தெளிந்த சித்தம் இவற்றோடு இருப்பேன்.
No comments:
Post a Comment