காதல் மழையில்... |
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
நன்றி - வைரமுத்து
உலகின் மிகச் சிறந்த காதல் வரி
இதுதானோ..!?
"நான் நேசித்ததும் உன்னையல்ல...
மணக்கப் போவதும் உன்னையல்ல...
உன் உள்ளத்தை..!"
இந்த மூன்று வரிகளுக்குப் பின்னால் உலகப் பிரசித்திப் பெற்ற ஒரு காதல் குறுங்கதை மறைந்திருக்கிறது. மாவீரன் டியூக் வெலிங்டன் பிரபு காதரின் என்ற பெண்ணை உயிருக்குயிராக நேசிக்கிறான். அவன் காதரினுக்கு எழுதியதுதான் இந்த மூன்று வரிகள்...
ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...
வரலாற்றின் முக்கியப் பக்கமாக இன்றளவும் அனைவர் நினைவுகளிலும் வந்து போகிற போர்முனை "வாட்டர் லூ". நெப்போலியனின் கடைசி யுத்தம். தனக்குள் இருக்கும் ஆன்மிக சக்திதான் உலகத்தையே வெற்றி கொள்ள வைக்கிறது என்ற கொள்கையில் உறுதியாய் இருந்த நெப்போலியனை எதிர்முனையில், கூட்டுப் படையை வழிநடத்தும் தளபதியாக எதிர் கொள்கிறான் வெலிங்டன்பிரபு.

1லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள், 35 ஆயிரம் போர்க் குதிரைகள், 500 பிரமாண்ட பீரங்கிகள் அணிவகுத்து நின்ற இந்தப் போர் 1812-ல் நெப்போலியனுக்கு ஒவ்வாத குளிர் மாதத்தில் நடந்தது. காலை தொடங்கிய போர் இரவு 11 மணிக்கு முடிவுக்கு வருகிறது. மாவீரன் என்ற அடையாளத்துடன் இருந்த ஃப்ரெஞ்ச் தேசத் தளபதி நெப்போலியன் தோல்வியை சந்திக்கிறான். போர்க் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செயின்ட் ஹெலீனா தீவில் அடைக்கப்படுகிறான்.
போர்முனைக்கு வந்த வெலிங்டன் பிரபு, அதற்கான வெற்றிக் கனியை ருசிப்பதற்கு முன்னர் கொஞ்ச காலம் 'திட்டமிடல்' பணிக்காக இந்தியாவில் தங்கிட வேண்டிய சூழல். அந்த சிறு இடைவெளியில்தான் அவனுக்கு ஓர் கடிதம் வருகிறது...
அந்தக் கடிதத்தை எழுதியிருந்தது வெலிங்டன் பிரபுவின் காதலியான காத்ரின்....
"எனக்கு அம்மை நோய் கண்டு விட்டது. அதன் பாதிப்பு என் முகத்தை விகாரமாக்கி விட்டது. அன்று நீங்கள் நேசித்து, நாளெல்லாம் வர்ணித்து மகிழ்ந்த அந்த வட்ட நிலா ஒளி முகம் இப்போது என்னிடத்தில் இல்லை. அழகிழந்த குரூபியாக உங்கள் காதரின் இருக்கிறேன். தயவு செய்து இனியும் என்னைப் பார்க்க வரவேண்டாம். நீங்கள் வேறு அழகான பெண்ணைப் பார்த்து மணம் புரிந்து கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் காதலி காதரைன்.
நெப்போலியனையே மண் கவ்வ வைத்த அந்த வீர இளைஞன் வெலிங்டன் பிரபு, காதரினுக்கு எழுதிய அந்தப் பதில் கடிதத்தில் இருந்தது... மேலே குறிப்பிட்ட அந்த மூன்றே வரிகள்தான்.
அந்த வரிகளை மீண்டும் வாசியுங்களேன்....உங்கள் காதலை நீங்கள் நேசிப்பீர்கள்..!

No comments:
Post a Comment