Friday, 19 February 2016

SMILE....306

காதல், கல்யாணம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்களை காமெடியாகச் சொல்லுங்கள் பார்ப்போம்!

ப்ரியா: பையன் காலில் பொண்ணு விழுந்தா அது கல்யாணம். பொண்ணு காலில் பையன் விழுந்தால் அது காதல்.

அர்ஜுன்: காதலிக்கும்போது அவளைத் தவிர வேறு யாரும் அழகாத் தெரிய மாட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகு அவளைத் தவிர எல்லோரும் அழகாத் தெரிவாங்க.

விக்னேஷ்வரன்: காதல் - ஆள் வேணும் சாமி. கல்யாணம் - ஆளை விடுடா சாமி.

செந்தில்: காதல், கண்ணில் விழும் தூசி. கல்யாணம், கண்ணைத் துளைக்கும் ஊசி.

ராடன்: காதல்ங்கிறது நாம தண்ணி லாரி மேல மோதுற மாதிரி. கல்யாணம்ங்கிறது தண்ணி லாரி நம்ம மேல மோதுற மாதிரி.

நாகராஜன்: காதலிக்கும்போது மொபைல் எப்பவும் கையிலேயே இருக்கும். கல்யாணம் ஆன பிறகு தெரிஞ்சே வீட்ல வெச்சுட்டுப் போவோம்.

தமிழன்: காதல் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. கல்யாணம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்.

கனகராஜ்: தினம் 108 தடவை போன் பண்ணா அது காதல். தினமும் 108-க்கு போன் பண்ணா அது கல்யாணம்.

நன்றி - டைம்பாஸ் விகடனில் வந்த ' பதில் சொல்லுங்க பாஸ் ' பகுதியிலிருந்து 

No comments:

Post a Comment