சமணம்: பஞ்சமந்திரம்
ஒவ்வொரு மதத்திலும் மந்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமண மதத்திலும் மந்திரங்கள் போற்றப்படுகின்றன.அவற்றில் தலையாயது பஞ்சமந்திரம் ஆகும்.இதனை சமணர்கள் குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்துள்ளனர்.
நமோ அரிஹந்தாணம்
நமோ ஸித்தாணம்
நமோ ஆஇரியாணம்
நமோ உவஜ்ஜாயாணம்
நமோ லோயே ஸவ்வஸாஹூணம்,
என்பதுதான் அம்மந்திரம்
இதனை ணமோகார மந்திரம்,பஞ்சமந்திரம்,மூல மந்திரம்,அனாதி மந்திரம்,நமஸ்கார மந்திரம் என்றெல்லாம் அழைப்பர். பிராகிருத மொழியில் உள்ள இது யாரால் எப்பொழுது ஆக்கப்பட்டது என்றுத் தெரியவில்லை.”ஷட்கண்டாகமம்” எனும் நூல்தான் முதன்முதலில் வரிவடிவம் பெற்றதாகும்.அதில் இந்த பஞ்ச மந்திரம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது
அருகதையோருக்கு வணக்கம்,சித்தர்களுக்கு வணக்கம், ஆசாரியர்களுக்கு வணக்கம்,ஆசிரியர்களுக்கு வணக்கம்,உலக சாதுக்களுக்கு வணக்கம் என்பதுதான் இம்மந்திரத்தின் பொருளாகும்.
இதில் எந்தவொரு மதக்கடவுளின் பெயரும் குறிப்பிடவில்லை.பொதுவாகவே உள்ளது.இதன் சிறப்பு பற்றி சீவக சிந்தாமணி நூலில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment