நிகோலா டெஸ்லா @ நயாகரா |
ராபர்ட் மோஸஸ் மின் நிலையம் மியூசியம் பார்ப்பதற்கு முன் உலகத்தார்க்கு தெரியாமல் மறைக்கப்பட்ட நிகோலா டெஸ்லா என்ற மாமனிதரை, இன்று நாம் பயன்படுத்தும் AC மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வடிவமைத்தவரைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
ரேடியோவைக் கண்டுபிடித்தவர் யார் எனக் கேட்டால் மார்க்கோனி என்போம்.
உண்மையில் கண்டு பிடித்தது டெஸ்லாத்தான். மார்க்கோனி ரேடியோவைக் 'கண்டுபிடிப்பதற்கு' இரண்டாண்டுகளுக்கு முன்னரே டெஸ்லா ரேடியோவைப் பற்றி ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.1892ம் ஆண்டின் ஆரம்பப் பகுதிகளிலே டெஸ்லா வானொலிக்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பொருத்தி, வானொலியை உருவாக்கியிருந்தார். அதற்குரிய வரைபடங்களையும் அவர் தயாரித்திருந்தார். அத்துடன் அவற்றை அமெரிக்கக் காப்புரிமை நிலையத்தில் (Patent Office) பதிவும் செய்திருந்தார். டெஸ்லாவின் கண்டு பிடிப்பு, லேப் அனைத்தும். தீக்கு இரையானது. தீ வைத்தவர் யார் தெரியுமா? எடிசன் தான் என்றும் சொல்கிறார்கள். ( எடிசன் - டெஸ்லா சண்டை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் )
ஆனால், டெஸ்லாவின் அதே வரைபடங்களின் அடிப்படையை வைத்துக் கொண்டு, மார்க்கோனி 1895ம் ஆண்டில் வானொலியைக் கண்டுபிடித்ததாக உலகம் முழுவதும் அறிவித்தார். இதை எதிர்த்து டெஸ்லா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார். ஆனால், டெஸ்லாவின் வழக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தள்ளுபடி செய்யப்படது.
ஆனால் 1904 ஆம் வருடம் அரசியல் செல்வாக்கு பெற்றவரும்,எடிசனின் பிரியத்திற்கு உரியவருமான மார்க்கோனி தான் ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று அமெரிக்கா அறிவித்தது. அதற்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.
இவர் வேறு என்னென்ன கண்டு பிடித்தார் என்பதை தெரிந்து கொள்ளும் முன்
நயாகராவுக்கும், டெஸ்லாவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்றும் உலகிலேயே அதிக அளவு நீர் மின்சாரம் ( Hydro electrical power ) அமெரிக்கா, கனடா இடையே ஓடும் நயகாரா அருவியின் மூலம் கிடைக்கிறது.
நீரில் இருந்து மின்சாரம் எடுக்கும் வித்தையை உலகிற்க்கு சொல்லி கொடுத்தவரே டெஸ்லா தான். அதுவும் உலகின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையத்தை நயாகராவில் தன் நண்பர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் உதவியுடன் 1881ல் அமைத்து மின்புரட்சியை துவக்கியவர்.
டெஸ்லாவைப் பற்றி நான் B E ( எலெக்ட்ரிக்கல் ) படிக்கும்போது ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலும் நயாகராவில் அவர் சிலையைக் கண்டபோது
என் ப்ரொபசர் பாலசுந்தரம் தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றியும் அவருடன் இருந்த டெஸ்லா பற்றியும் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றியும் சொன்னது கொஞ்சம் ஞாபகம் வந்தது.
டெஸ்லா பற்றி தெரிந்து கொள்ளலாமா...

No comments:
Post a Comment