R a i n b o w Bridge
வானவில் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம் நயாகரா ஆற்றின் மீது அமைந்து அமெரிக்கா - கனடா நாடுகளை இணைக்கின்றது. 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் தண்ணீர் மட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில், 950 அடி நீளத்தில் இருக்கின்றது.
இந்த பாலத்தின் அடியில் தண்ணீர் 30 மைல் வேகத்தில், ஒவ்வொரு நிமிடத்துக்கும் 4 முதல் 6 மில்லியன் கன அடி தண்ணீர் கடந்து செல்கின்றது.
( ஒரு 10 நாளுக்கு இந்த அளவு தண்ணீர் தமிழ்நாட்டுக்குக் கிடைச்சா போதும்..நாலு போகம் விளைவிக்கலாம் ! )
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் வண்ண ஒளியூட்டப்பட்ட நயாகரா அருவிகளும், வாணவேடிக்கைகளும் பார்க்க இந்த பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குவிவார்களாம் .
நாங்க நிக்கற படகுக்கு கீழே 175 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருக்குதாம்... |
No comments:
Post a Comment