பிட்ஸ்பர்க் நகர் மலைப் பிரதேசமாக இருப்பதால் சாலைகள் வளைந்தும், நெளிந்தும், மேலும், கீழுமாக செல்கின்றன.
கோவிலிலிருந்து நேரே நகரின் மையத்தில் உள்ள PPG Place க்குச் சென்றோம்.
|
@ PPG Place |
அழகான ஐந்து வானுயர் கட்டிடங்கள் சுற்றிலும் அமைய நடுவில் செயற்கை நீரூற்றுக்கள் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக உள்ளது,
|
நீரூற்றுக்குப் பின்னால் இரண்டு அழகான PPG கட்டிடங்கள் |
|
நீரூற்றுக்கு நடுவே இன்னொரு போஸ் |
|
PPG கட்டிடங்களுக்கு அருகே இன்னொரு அழகான கட்டிடம் |
|
மிதி ரிக் ஷா
நாங்கள் சென்றது சனிக்கிழமை என்பதால் மக்கள் இப்பகுதியில் உள்ள கேளிக்கை இடங்களில் நடனமாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் இங்கிருந்து விட்டு நகரின் தோற்றத்தை மேலிருந்து பார்க்க குன்றின் மீது சென்றோம்.
|
|
பிட்ஷபார்க் நகரத்தின் பின்னணியில் போஸ் |
மூன்று ஆறுகள், 29 பெரிய பாலங்கள், 425 சிறிய பாலங்கள் என நகரில் நிறைய பாலங்களை பார்க்க முடிகின்றது. ஒவ்வொரு பாலமும் ஒவ்வொரு டிசைன்.
கேண்டிலீவர், சஸ்பென்ஸன், ஹேங்கிங், பீம், ஸ்டோன், etc என பற்பல வடிவங்களில் பாலங்கள். City of Bridges எனவும் இந்த நகர் அழைக்கப்படுகின்றது.
JP the Rickshaw is an mobile bar where all customer pedal to move it
ReplyDelete