Friday, 17 May 2019

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 30

உலக குடும்ப தினத்தை ஒட்டி 15-5-19 அன்று மாலா முகநூலில் 19-5-2012ல்  ஞானவயலில் வெளியான போட்டோ மற்றும் செய்தியினை தெரிவித்திருந்தாள். இந்த இரண்டு நாளில் பலநூறு பேர்கள் இதை பார்த்தது, விவரம் கேட்டது எனக்கு பலப்பல மலரும் நினைவுகளைத் தூண்டிவிட்டது.
அனைவருக்கும் நன்றி. 
இன்றைய எங்கள் குடும்ப இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் போட்டோவில் உள்ளவர்களை பற்றிக் கேட்டதினால் 
ஒவ்வொருவரையும் பற்றி கொஞ்சம் -



4-7-1974 அன்று என் அப்பாவின் 60ம் ஆண்டு நிறைவின்போது எடுத்த போட்டோ -

அப்பாவிற்கு 5 இளைய சகோதரர்கள், 1 சகோதரி. ஒரு சகோதரரும், சகோதரியும் இளமையிலேயே மறைந்துவிட்டார்கள்.  அப்பாவின் மற்றைய 4 சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், நாங்கள் ( 3 சகோதரர்கள், 2 சகோதரிகள் ) அனைவருமே அப்பா, அம்மா சொல்கேட்டு வேத வாக்காக வழி நடந்தவர்கள்.

என் இளைய பருவம் 14 வயதுவரை ( சிதம்பரம் சென்று படிக்கும்வரை ) இவர்கள் காட்டிய பாசமழையில்தான் கழிந்தது, ஒவ்வொருவரையும் பற்றி நினைக்கும்போது உணர்ச்சிகள் பொங்கி கண்ணீராக வழிகின்றது.

இனி ஒவ்வொருவரையும் பற்றி -

முதலில் தரையில் அமர்ந்திருப்பவர்கள் ( இடமிருந்து வலம் )

1. திருமதி கலைச்செல்வி நடராஜன் ( எனது சித்தப்பா அமரர் சிதம்பரம் அவர்கள் மகள் ) - ஒரு மகள், ஒரு மகன், மகள் Ms கௌரி தற்போது கணவனுடன் இரு குழந்தைகளுடன் NewJersy US ல் வசிக்கிறாள் 

2. திரு விஜயராகவன் ( எனது சித்தப்பா அமரர் ராமன் அவர்களின் மகன் ) -
மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஹைதராபாத்தில் வசிக்கிறார்.

3. திரு இளங்கோவன் ( எனது சித்தப்பா அமரர் சிதம்பரம் அவர்களின் மூன்றாவது மகன் ) - Dr N A பெருமாள் /ஆழியார் அவர்களின் சகோதரர் மகளை மணந்து ஒரு மகனுடன் வசிக்கிறார்.

4. எனது கடைசி சித்தப்பா அமரர் ஆறுமுகம் - ஐஸ் பாக்டரி /அருணா ரேடியோஸ் இரண்டையும் சிறப்பாக நடத்தியவர். இயக்குனர் T ராஜேந்தர் தன்  சிறுவயதில் இக்கடைக்கு வந்து  பாடல்கள் கேட்டு தன் இசை ஞானத்தினை வளர்த்துக்கொண்டதாக கூறுவார். சித்தப்பா திருமணம் செய்துகொள்ளாமல் பலருக்கும் உதவிகள் செய்துகொண்டே இருப்பார். என் மீது தனி பாசமும், அன்பும் கொண்டவர்.

5. சித்தப்பா கையில் இருக்கும் குழந்தை என் சகோதரி துளசி அவர்களின் மகன் - தவமாய் பெற்ற குழந்தை - எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் - எல்லோரிடமும் தாவிச்  செல்லும் இக்குழந்தை இப்போட்டோ எடுத்த அடுத்த ஓராண்டில் எங்களைவிட்டு மறைந்தது மிகப் பெரிய இழப்பு.

6. திரு பாலசுப்ரமணியன் ( எனது சித்தப்பா திரு வைத்திலிங்கம் அவர்களின் கடைசி மகன் ) - திருமணமாகி ஒரு மகள்.

7.திரு வெங்கடேசன் (  எனது சித்தப்பா திரு வைத்திலிங்கம் அவர்களின்
மகன் ) திருமணமாகி ஒரு மகளுடன் வசிக்கிறார்.

8. திருமதி விஜயலக்ஷ்மி முத்துக்குமார் ( எனது சகோதரி துளசி அவர்களின் மூத்த மகள் ) - கணவன் மற்றும் இரண்டு மகன்கள் சென்னையில் வசிக்கிறார்கள். ஒரு மகன் திரு அர்விந்த் Amazon /லண்டனில் வேலை பார்க்கிறார்.

அடுத்தது நாற்காலிகளை அமர்ந்திருப்பவர்கள்  ( இடமிருந்து வலம் ) -

1. எனதுசித்தப்பா அமரர் ராமன் - மனைவி , ஒரு மகள், ஒரு மகன் 
விவசாய துறையில் பணியாற்றி நிறைவாக வாழ்ந்தவர்.

2. எனது சித்தப்பா அமரர் சிதம்பரம் - மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகள். லேபர் துறையில் சிறப்பாக பணியாற்றியவர். கலைஞர் மற்றும் MGR அவர்களுடன் சிறுவயதிலிருந்தே தொடர்பு  வைத்திருந்தவர்.  அனைவரிடமும் மதிப்பு பெற்றவர்.

3. எனது சித்தப்பா  அமரர்  வைத்திலிங்கம்  - மனைவி, ஒரு மகள், ஐந்து மகன்கள் .நகராட்சி மேலாளராக சிறப்பாக பணியாற்றியவர். என் உயிரைக் காப்பாற்றியவர் ( இதுபற்றி படிக்க இங்கே சொடுக்கவும் )

4. அப்பா, சித்தப்பாக்களின் அத்தை - போட்டோவில் உள்ள அத்துணை பேர்களையும் வளர்த்தவர்கள். சலிக்காமல், வேலை பார்ப்பார்கள். 

5. அடுத்து என் அம்மா அமரர் அவயாம்பாள் - இப்போட்டோவில் உள்ள அனைவரின் நலத்திற்காக பாடுபட்டவர் ( அம்மாவைப் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும் ). M  BA படிக்காமலேயே குடும்ப நிர்வாகயியலைக் கரைத்துக் குடித்தவர்.இறுதிக்காலம் வரை கற்றுக்கொண்டே இருந்தவர். மேலே தொடரமுடியாமல் கண்ணீர் வழிகின்றது.

6. அடுத்து என் அப்பா அமரர் சுப்பிரமணியன் - கணித மேதை ஆனால் SSLC க்கு மேலே படிக்க அருகில் கல்லூரி இல்லை. மயிலாடுதுறை நகராட்சியில் மேலாளராக சிறப்பாக பணியாற்றியவர். வாழ்நாள் முழுதும் பிறருக்காக உதவி செய்து வாழ்ந்தவர். கோடி முறைக்கு மேலே ராம ஜபம் செய்தவர். 85 லட்சம் முறை ஸ்ரீராமஜெயம் எழுதியவர். ஓய்வில்லாமல் இறைப்பணி. சமுதாயப்பணி ஆற்றியவர்.

7. அடுத்து என் மூத்த சகோதரர் அமரர் சுவாமிநாதன் - SSLC தேர்வு எழுதிய அடுத்தநாளிலிருந்து அரசாங்கப்பணியில் 45 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர். பனி ஓய்வு பெறும்போது விவசாயத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றினார். மனைவி , இரண்டு மகன்கள் ( சந்திரசேகரன், சுந்தரராமன் )

8. என் அடுத்த சகோதரர் திரு நடராஜன் - மனைவி ஒரு மகன், ஒரு மகள்.
மயிலாடுதுறையில் வசித்து வருகிறார். இந்தியா முழுதும் உள்ள அத்துணை இடங்களுக்கும் கைலாஷ், பத்ரிநாத், கேதார்நாத்  உட்பட  புனித யாத்திரை சென்று வந்தவர். என்னை படிக்க வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 
மகன் சிவராமன் மனைவி, மகளுடன் சிகாகோ /US ல் வசிக்கிறார். அடுத்த மாதம் நானும், மாலாவும் இவர்களுடன் இருக்க செல்கிறோம்.

9. என் சகோதரி சிவகாமி அவர்களின் கணவர் அமரர் இரத்தினசபாபதி -
ப்ரூக்பாண்ட் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி சாதனைகள் புரிந்தவர். திருப்பணி செல்வர். சமுதாயத் தலைவராக சாதித்தவர்.
குழந்தைகள் இல்லை என்றாலும் நிறைய பேர்களுக்கு உதவியவர்.

10. எம் இதயதெய்வம் திரு ஆறுமுகம் - சகோதரி துளசி அவர்களின் கணவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியவர். என்னை  படிக்க வைத்து 
ஆளாக்கியவர். SSLC  முடித்து 8 ஆண்டுகள் சிதம்பரத்தில் இவர்கள் வீட்டில் தங்கி படித்தது -என் வாழ்வில் திருப்புமுனை. என்னைப் போல் பலரையும் படிக்கவைத்தவர். தற்போது தனது இளைய மகள் உமாவுடன் கோயமுத்தூரில் வசிக்கிறார். 80 வயது நிறைவு பெற்றுவிட்டது. சற்றே  உடல்நலமின்றி இருக்கும் அவர் பூரண நலமடைய வாழ்த்திக்கொண்டே இருக்கின்றோம்.

அடுத்து கீழ் வரிசையில் நிற்பவர்கள் ( இடமிருந்து வலம் )

1. திருமதி ராஜம் ராமன் - சின்னம்மா தற்போது மகன் விஜராகவனுடன் 
வசித்து வருகிறார்.

2. திருமதி சாரதா சிதம்பரம்  - சின்னம்மா தற்போது மகன் செல்வராஜுடன் சென்னையில் இருக்கிறார்.

3. திருமதி சிவகங்கை வைத்திலிங்கம் - மயிலாடுதுறையில் மகன் சிவகுமார், பாலசுப்ரமணியனுடன் வசிக்கிறார்.

4. திருமதி மங்கையற்கரசி கணேசன் ( சித்தப்பா வைத்திலிங்கத்தின் மூத்த மகள் ) - எனது சிறுவயது முதல் தோழி. இரு மகள்கள்  ஒரு மகள் ஜெயசூர்யா கணவன், இரு மகள்களுடன் Houston / US ல் வசிக்கிறார்.

5. திருமதி பானுமதி - இரு மகள்களுடன் மயிலாடுதுறையில் வசிக்கிறார்.

6. அடுத்து அமரர் அண்ணி சரஸ்வதி சுவாமிநாதன்  - என்னை வளர்த்தவர்களில்  ஒருவர்  -  இவரின் இறுதிக்காலம் எங்களுடன் திருச்சியில் கழிந்தது.

7. அடுத்து அண்ணி கலைவாணி நடராஜன் அண்ணனுடன் மயிலாடுதுறையில் வசிக்கிறார். அண்ணனுடன் இந்தியா முழுது சுற்றி வந்தவர்.

8. அடுத்து பெரியக்கா சிவகாமி இரெத்தினசபாபதி - சிறுவயதில் என்னை வளர்த்தவர் . குழந்தை இல்லாததால் இன்னும் என்னை மகனாக 
வளர்ப்பவர். மயிலாடுதுறையில் வசிக்கிறார். 80 வயது நிறைவடையப்போகின்றது.

9. எனது சகோதரி அமரர் துளசியக்கா. இன்று எனது எல்லா வளம் /நலத்திற்கு காரணமானவர். என்னை பண்புடன்/ ஒழுக்கத்துடன் வளர்த்தவர். 8  ஆண்டு காலம் என்னை கல்லூரியில் படிக்க வைத்தவர். நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தவர். இவர் பெருமை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். உள்ளுணர்வு அதிகம் உள்ளவர். இவர் சொன்னதெல்லாம் நடந்துள்ளது.

மேல் வரிசையில் நிற்பவர்கள் ( இடமிருந்து வலம் )

1. திரு செல்வராஜ் ( சித்தப்பா சிதம்பரம் அவர்களின் மூத்த மகன் )  வங்கித்துறையில் பணியார்றிஓய்வு பெற்று மனைவி, மகளுடன் சென்னையில் வசிக்கிறார் 

2. திரு சிவகுமார் ( சித்தப்பா வைத்திலிங்கம் அவர்களின் மகன் ) - மனை, மகனுடன் மயிலாடுதுறையில் வசிக்கிறார்.

3. திரு சுந்தரராஜன் ( சித்தப்பா வைத்திலிங்கம் அவர்களின் மகன் ) - மனைவியுடன் மயிலாடுதுறையில் வசிக்கிறார். 

4. அடுத்து 20 வயது JP ! ஒரே மகன் ஸ்ரீராம். மனைவியுடன் US ல் வசிக்கிறார். அடுத்த மாதம் நாங்கள் இவர்களுடன் இருப்போம்.

5. அடுத்து பெரியண்ணன் சுவாமிநாதனின் இரண்டாவது மகன் திரு சுந்தரராமன்-ஷீலா   -  தற்போது மனைவி, இரு மகள்களுடன் US ல் வசிக்கிறார்
இரு மகள்களும் அறிவுஜீவிகள்.

6. அடுத்து பெரியண்ணன் சுவாமிநாதனின் மூத்த 
மகன் அமரர் சந்திரசேகரன் - நெய்வேலி NLC யில் பணியாற்றியபோது எதிர்பாராத மறைவு.  மனைவி, மற்றும் இரு மகன்கள். முதல் மகன் திரு பிரசன்ன கணேஷ் கத்தாரில் பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் IIM முடித்து பெங்களூரில் வேலை.அடுத்த மாதம் பிரசன்ன கணேஷ் தந்தையாகப் போகிறார் - நாங்கள் கொள்ளு தாத்தா - கொள்ளு பாட்டியாகப் போகிறோம்.

7. அடுத்து திரு பாஸ்கரன் ( சித்தப்பா வைத்திலிங்கம் அவர்களின் மகன் )
கல்வித்துறையில் பணியாற்றி மயிலாடுதுறையில் வசிக்கிறார். ஒரு மகன்

8. அடுத்து திரு தர்மராஜ்  (  சித்தப்பா சிதம்பரம் அவர்களின் இரண்டாவது மகன் )  - மனைவி,  மகன், மகளுடன் சென்னையில் வசிக்கிறார்.


சுருக்கமாக விவரங்கள் சொல்லியுள்ளேன். மேலும் விவரங்கள்/போட்டோக்கள் இங்கே பதிவிடலாம்.


என் மீது அன்பும் 
பாசமும் பொழிந்து என் இளமைக்காலத்தை இனிதே அமைத்த என் இனிய உறவுகளே .....
உங்களிடம் நான் பட்டுள்ள நன்றிக்கடனைத்  திருப்பித் தந்துள்ளேனா 
என்று நினைக்கும்போது குற்ற உணர்வே ஏற்படுகின்றது....


35 பேர்களாக இருந்த இக்குடும்பம் தற்போது 84  பேர்களாக விரிந்துள்ளது.மேலே உள்ள போட்டோவில் தரையில் இருப்பவர்களில் இருவரும்,  
நாற்காலியில் இருப்பவர்கள் எட்டு பேர்களும், முதல் வரிசையில் நிற்பவர்களின் இரண்டு பேர்களும்,  மேல் வரிசையில் ஒருவரும் மொத்தம் 13 பேர்கள் இன்று இல்லை. அவர்கள் நம்மை தெய்வங்களாக நின்று வழி நடத்துகின்றார்கள்.

நானும் விடை பெறுவதற்குள் என் நன்றிக்கடன்களைத் திருப்ப 
வாய்ப்புகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன்,

இக்குடும்பத்தினர் எங்கிருந்தாலும் வாழ்வின் வளங்கள் 
நிறைவாகப் பெற்று நீடூழி வாழ்க !
வாழ்க வளமுடன் !

No comments:

Post a Comment