Thursday, 1 November 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 20

1955 - JP & பக்கிரி

என் சின்ன வயசு தோழன் எங்கள் வீட்டில் வேலை செய்த நல்லம்மா என்பவரின் பையன் பக்கிரிமலேயாவில் வசதியாக வாழ்ந்த நல்லம்மா குடும்பம் இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவுக்கு குடி பெயர்ந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த மலேயா பணம் இங்கு செல்லுபடியாகாததால் ஏழ்மைக்குத் தள்ளப்பட்டனர். நல்லம்மாவும், பக்கிரியும் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர்.


பொங்கலுக்கு முன் ஒரு தினம், நாங்கள் டாக்டர் விளையாட்டு விளையாடினோம். நான்தான் டாக்டர். மருந்துக்கு வீட்டிலிருந்து சீனி சக்கரை எடுத்து வந்தேன். நோயாளிகள் பக்கிரி, பக்கத்து வீட்டு சாமா, கொல்லை வீட்டில் இருந்த தமிழரசன். எல்லோருமே சக்கரையை பங்கு போட்டு சாப்பிட்டோம். இந்த விளையாட்டு மதியம் நடந்தது.

மாலையில் எனக்கு ஏதோ மாதிரி உணர்வு. நாக்கு, கண்கள் ஊதா நிறமாக மாறிவிட்டது. அம்மா, சின்னண்ணன் இவர்கள் என் நாக்கைப் பார்த்துவிட்டு copying பென்சில் ( வீட்டில் இது இருக்கும் ) நாக்கில் பட்டிருக்கலாம் என்று நினைத்து விட்டார்கள்இரவு ஒன்பது மணிக்கு தினமும் வைத்திலிங்கம் சித்தப்பா ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வருவார்கள்இவரை  வீக்லி தாத்தா என்று சேகர் - சுந்து அழைப்பார்கள். ஏனெனில் அப்போது வந்துகொண்டிருந்த Illustrated Weekly Magazine பத்திரிக்கை இவர் கையில் இருக்கும். அதை வாங்கி நாங்கள் Phanthom படக்கதை படிப்போம் ).

மாயூரம் முனிசிபல் ஆபீசில் மேனேஜராக பணியாற்றிய சித்தப்பா தினமும் இரவு வீட்டுக்கு வந்து அப்பாவிடம் ( அப்பா ஏற்கனவே அங்கு மேனேஜராக வேலை பார்த்தவர்கள் ) பேசிவிட்டு செல்வார்கள்.
அன்றைய தினம் நான் படுக்கையில் முனகிக்கொண்டிருந்ததைப் பார்த்த சித்தப்பா என்னைத் தூக்கிக்கொண்டு ( அந்த நேரம் வீட்டு வழியாக ஒரு கார் சென்றுள்ளது ) காரில் சுந்தரம் டாக்டர் வீட்டிற்கு சென்றபோது அங்கு
கம்பவுண்டர் ராமமூர்த்தி ஐயர் இருந்திருக்கின்றார் ( இவர் எங்கள் வார்டு கவுன்சிலர் ). அவர் என்னைப் பார்த்தவுடனே உடலில்  விஷம்
ஏறியிருப்பதை சொல்லி உடனே வீட்டுக்கு வந்து அம்மாவிடம் விசாரித்திருக்கின்றார்வீட்டில் விஷ மருந்து ஏதாவது இருக்கிறதா என்று கேட்டதற்கு அம்மா  சர்க்கரை டப்பாவுக்கு எறும்பு வராமல் இருக்க எறும்பு பவுடர் போட்டிருக்கிறேன் என்று  சொல்லியிருக்கிறார்கள்அந்த இடத்தைப் போய் பார்த்தபோது நான் விளையாடுவதற்காக சர்க்கரை எடுத்தபோது அது கீழே சிந்தி நான் அதை முதலில்  எறும்பு பவுடருடன் வாயில் போட்டுக்கொண்டு மற்றதை பேப்பரில் வைத்து எடுத்து வந்து மற்றவர்களுக்கும் கொடுத்திருப்பதை என் கை தடங்களை வைத்து ஊகித்து  கண்டு பிடித்து உடனடியாக விஷ முறிவு சிகிச்சை கொடுத்து என்னை காப்பாற்றி இருக்கின்றார்கள்

என் உடலே நீல நிறமாக மாறிவிட்டதாக அம்மா சொல்வார்கள். பக்கிரி,சாமா போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லைஇந்த சம்பவத்தால் அப்பா சபரிமலை போவதாக இருந்ததை கேன்சல் செய்துவிட்டார்கள். அதிகமாக விஷம் என் உடலில் இருந்ததால் நீல நிறம் மாற வெகுநாள் பிடித்ததாம்.

சித்தப்பா   2004

என்னைக் காப்பாற்றிய சித்தப்பாவை சென்ற மாதம் மாயூரம் சென்றபோது பார்த்துவிட்டு ஆசிகள் வாங்கி வந்தேன். 85 வயதில் மிகவும் தளர்ந்திருக்கும் அவரைப் பார்த்தபோது  மனம் மிகவும்  கனத்துப்போனதுசித்தப்பா உடல்நலம் விரைவிலே குணம் பெற இறைநிலையை வேண்டி திருச்சி திரும்பினேன்   

என் இள வயது தோழர்கள் இன்று எங்கிருந்தாலும் எல்லா நலன்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ்க!
வாழ்க வளமுடன்!

4 comments:

  1. I remember Sundaram doctor and Ramamurthy compounder so well and doctor Narayanan too..
    When I came here, one of my adopted families said they had an uncle in Mayuram when they heard where I was from and that uncle turned out to be Sundaram doctor... what a small world!!

    did you really turn blue blue?

    ReplyDelete
    Replies
    1. இந்த சம்பவம் நடந்தபோது எனக்கு ஐந்து வயது இருக்கலாம். விளையாடியது, சக்கரை சாப்பிட்டது, டாக்டர் வீடு போனது மட்டும் ஞாபகம் இருக்கிறது.

      மற்றவை என் அம்மா சொன்னது..

      அவர்களிடம் நீங்கள் நல்ல கலரா இருக்கீங்க..உங்க புள்ளையை கருப்பா பெத்துட்டீங்களேன்னு கேட்டா அதுக்கு அவங்க இவன் சின்ன வயசுல எறும்பு பாஷாணம்
      சாப்பிட்டுட்டான்..அதான் கருப்பா ஆயிட்டான் என்பாங்க!

      Delete
    2. hahaha.. like நீல வண்ண கண்ணன் :)

      Delete
  2. I have heard this story narrated by Appayi many times. Yes! Sekar and I always call that தாத்தா, "வீக்லி தாத்தா" :))

    ReplyDelete