தமிழ் Tongue Twisters
மானமே நண்ணா மணமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
மானா மணிமேனி மான்
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
- கவி காளமேக புலவர்
- கவி காளமேக புலவர்
- புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா. - வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை. - துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும். - கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்! - லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு
- இது யாரு தச்ச சட்டை இது எங்க தாத்தா தச்ச சட்டை
- ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி. கிழ நரி முதுகுல ஒரு பிடி முடி நரை முடி
இந்த வாக்கியங்களை மெதுவாகவும், வேகமாகவும் சொல்லி பழகுவது
நல்ல தமிழ் உச்சரிப்புக்கு உதவும்.
No comments:
Post a Comment