Monday 5 November 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 21

JP singing மயக்கமா...கலக்கமா...  
கல்லூரி கடைசி தினம் 

BE Electrical & Electronics வகுப்பில் மொத்தமே 19 பேர்தான்..! திட்டமிட்டபடி விதவிதமான காஸ்ட்யூமில்  வகுப்புக்கு போனோம். நான் நீல கலர் லுங்கி, மேலே மஞ்சள் கலர் ஜிப்பா, கழுத்துல ஸ்கார்ப், தலையில பேப்பர் தொப்பியோட போனேன். பார்த்தசாரதின்னு எலக்ட்ரிகல் ரீடர்  ஓர் அரை மணி நேரம்  திட்டித் தீர்த்து டிரஸ் மாற்றி வரும்படி சொல்லிவிட்டார். அத்தனைபேருக்கும் மூட் அவுட்.

அன்றைய மாலை நிகழ்ச்சிகளை கேன்சல் பண்ணிவிடலாமா என்று சிலர் சொன்னதிற்கு மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.


Final Year BE student JP
மாலை நிகழ்ச்சியில் ஐந்து ஆண்டுகள் எங்களுக்கு வகுப்பெடுத்த அத்தனை லெக்சரர்கள், ப்ரொபாசர்கள், லாப் பணியாளர்கள், அட்டண்டர்கள், ஹாஸ்டல் பணியாளர்கள் என ஒருவரையும் விடாமல் அழைத்துவந்து நன்றி தெரிவித்து விருந்தளித்தோம். ஒரு சிறு கலை நிகழ்ச்சியும் நாங்களே தயாரித்து அளித்தோம். நான் மயக்கமா, கலக்கமா..பாடல் பாடினேன். Electro Cocunut  Equivalent என்ற பேரிலே ஒரு குறுநாடகம் எழுதி நான், நைனா முகமது, கருணாகரன் மூவரும் நடித்தோம். வாயாலே இசைக்கருவிகள் போல ஓசை எழுப்பி Come September ம்யூசிக் போட்டோம். வேலுமுத்துசாமி 'காவியமா..நெஞ்சின் ஓவியமா..' பாடலை ஆண்,பெண் குரலில் பாடி அசத்தினான். இரண்டு லெக்சரர்கள்  பாடி ஆடினர்.

இரவு விருந்து முடிந்து, க்ரூப் போட்டோக்கள் எடுத்தபிறகு செகண்ட் ஷோ சினிமா போனோம். எங்களை அழைத்துப் போனது காலையில் எங்களைத் திட்டிய பார்த்தசாரதி! பார்த்த படம் பாரதவிலாஸ். 
Last day in College -with classmates -1974
மேலே உள்ள போட்டோவில் நைனா முகமது மட்டும் மிஸ்ஸிங்..
அவனைப் பற்றி தனி post  பிறகு.....

3 comments:

  1. looking very smart JP!! :)

    hahaha...just imagined you with நீல கலர் லுங்கி, மேலே மஞ்சள் கலர் ஜிப்பா, கழுத்துல ஸ்கார்ப், தலையில பேப்பர் தொப்பி :))

    ReplyDelete
    Replies
    1. No photo was taken in that costume! Later I posed for a photo in similar dress. I'll locate the same & publish!

      Delete