Tuesday 24 October 2023

கல்லணை

கரிகாலன் கட்டியது, இப்போது நாம் காணும் கல்லணை தான் என்பதற்கான ஆதாரம் என்ன?

கரிகாலன் காவிரியில் அணை கட்டியதற்கான குறிப்புகள் பட்டினப்பாலை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, தெலுங்கு சோழனின் 7ஆம் நூற்றாண்டு மாலேபட் செப்பேட்டிலும், பராந்தக சோழனின் வேலஞ்சேரி செப்பேட்டிலும் காணப்படுகிறது.

சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகளுக்கு (2000 ஆண்டுக்கு மேல் பழமையானது) மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது கரிகாலன் கல்லணை.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் சங்ககாலத்தில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது.

பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்

Kallanai Dam- The oldest dam in the world is still in use, 1079 feet long and 66 feet wide dam built in 200 AD. The dam was originally constructed during the reign of Chola King Karikalang.

NO INDIAN TEXTBOOKS WILL TEACH YOU ABOUT THE GREATNESS OF INDIAN KINGS

No comments:

Post a Comment