Thursday, 6 November 2025

கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.!


1. கோழி முட்டையின் மேல் அமர்ந்து அடைகாக்கும் முன் ! தேவையான முட்டைகளை இடுகிறது - திட்டமிடல் ( Good Planning )

2. அடை காக்கும் போது, ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கும் - ஒழுக்கம் ( Discipline )

3. சாப்பிடாமல் அதிக நேரம் அடை காக்க அமர்வதால் தன் உடல் எடையை இழக்கிறது! - தியாகம் மற்றும் சுய மறுப்பு ( Sacrifice and self denial )

4. அடுத்த கோழி இட்ட முட்டை என்றாலும் அடைகாக்கும்! - பாகுபாடற்ற மற்றும் தாராளமான மனம் ( Indiscriminate and Generous )

5. பொறுமையுடன் 21 நாட்கள் முட்டையின் மேல் அமர்ந்து அடை காக்கும்! சில முட்டைகள் குஞ்சு பொரிக்க வில்லை என்றாலும் மீண்டும் முட்டைகள் தொடர்ந்து இடும் - நம்பிக்கை மற்றும் தைரியம் ( Hope, faith and Sacrifice).

6. எந்த முட்டை குஞ்சு பொரிக்காதது என்று அந்த முட்டையை மட்டும் உருட்டி விட்டு விடும் - உணர்திறன் மற்றும் விவேகம் ( Sensitive & Discerning )

7. அழுகிய முட்டையை தவிர்த்து விட்டு சரியான முட்டை மேல் அக்கறை காட்டும். - புத்திசாலித்தனம், விழிப்புணர்வு மற்றும் யதார்த்தம்! ( wise, conscious and realistic )

8. யாரையும் அதன் குஞ்சுகளை தொட விடாது! - பாதுகாப்பான அன்பு ( Protective Love )

9. எப்பொழுதும் தன் குழந்தைகளை ஒன்றாக வைத்து இருக்கும் - அமைதி ஒற்றுமை ( Unity of Peace)

10. குழந்தைகள் வளர்ந்து பெரிதாகும் வரை குஞ்சுகளை விட்டு நகருவதில்லை - வழிகாட்டுதல் ( Mentoring )

உங்கள் கனவுகளை வாழ வையுங்கள், ஒரு நாள் அது நிறை வேறும், அது வளர்வதை பார்ப்பீர்கள்

No comments:

Post a Comment