ரொம்ப நேரமா ஒரே இடத்தில உட்கார்ந்து ரீல்ஸ் பார்த்துக்கிட்டு இருந்தவன், திடீர்னு எந்திரிக்கிறான்னா ஒன்னு சார்ஜ் தீர்ந்து போய் இருக்கணும். இல்லன்னா நெட் தீர்ந்து போய் இருக்கணும்.
""""""""""""""'
வாழ்க்கையில அன்பு, பாசம், நேசம், சொந்தம், பந்தம் இப்படி எல்லாம் இருக்கணும்னா முதல்ல கை நிறைய பணம் இருக்கணும்..!
""""""""""""""'
பேசிப் பேசி போரடித்த பின்பு, பேச மிச்சமிருக்கும் ஒரு வார்த்தை "கொஞ்சம் பிஸி. அப்புறம் பேசுறேன்.."
""""""""""""""'
"நான் இருக்கிறேன்.." என்பது தைரியம்.
"நான் தான் இருக்கேன்ல.." என்பது இம்சை.
""""""""""""""'
எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் "நீ நல்லா இருப்ப.." என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது.
ஓர் எல்லைக்கு மேல் கேள்வி கேட்டால் அது அறிவியல்.
கேள்வி கேட்காமலே நம்ப வேண்டியிருந்தால் அது ஆன்மிகம். (ஆன்மீகம் என்பது தவறு )
""""""""""""""'
கழுத்துல "டை" கட்டிக்கிட்டு ஸ்கூல் போக ஆரம்பிச்சு, தலையில் "டை" அடிச்சுக்கிட்டு வேலைக்கு போவதில் முடிகிறது வாழ்க்கை.
""""""""""""""'
படிக்கட்டுல தொங்கிட்டு வந்தாலும் பரவாயில்ல, படிக்கட்டுல தொங்கிக்கிட்டே போன் பார்த்துக்கிட்டு வராதேன்னு சொல்லுற அந்த பஸ் கண்டக்டர் மனசு தான் சார் கடவுள்..!

No comments:
Post a Comment