சபாவுல பாகவதர் பாடுறது சரியாவே கேட்க மாட்டேங்குதே?
பாகவதர் பாடுறது" பாதாள பைரவி "ராகம்!
*********************************
பெட்ரோல் விலை கூடினதுக்காக இப்படியா?
என்னாச்சு?
"பிரசவத்துக்கு பாதி தூரம் இலவசம்"னு அந்த ஆட்டோவுல எழுதியிருக்கே!
*********************************
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன்?
என்னை எதிர்த்து கட்சித் தொண்டர்கள் யாராவது பேசினா கட்சியை " அபார்ஷன் " செய்துடுவேன்னு பயமுறுத்துறாரே!
அமைச்சரே! அரண்மனைக்கு வந்த புலவர் ஏன் தள்ளாடிக்கிட்டே பாடுறார்?
"சரக்கு" உள்ள புலவரா அழைத்து வரச்சொன்னீர்களே..... அதான் மன்னா!
*********************************
எங்க பொண்ணை பையன் மாதிரி வளர்த்துட்டோம்.....!
அதுக்கென்னங்க இப்போ?
வரதட்சணை நீங்கதான் தரணும்!
No comments:
Post a Comment