தமிழ் வாத்தியார் பாவம் அவரை விட்டுருங்க!
முதல் நாள் வகுப்பு ! தமிழ் வாத்தியார் மாணவர்களை பார்த்து என் வகுப்பில் தமிழ் தான் பேச வேண்டும் சரியா என்று கேட்க !
மாணவர்கள் அனைவரும் ஒன்றாக
" ஓகே " சார்!
ஆசிரியர் - அடி பிச்சிடுவேன்! சரி எல்லாரும் ஒருவன் பின் ஒருவராக உங்கள் பெயரை சொல்லுங்க!
முதல் மாணவன் - ஐயா என் பெயர் பசுவுக்கு உடம்பு சரி இல்லை!
ஆசிரியர் - என்னப்பா சொல்றே! தமிழ் வேண்டாம் பா ஆங்கிலத்தில் உன் பெயரை சொல்லு!
மாணவன் - கௌ சிக் சார்!
ஆசிரியர் - சரி உங்க அப்பா பெயர் சொல்லு!
மாணவன் - கிங் கௌ மில்க் சார்!
ஆசிரியர் - ஐயோ ! எனக்கு புரிய மாதிரி தமிழில் சொல்லுப்பா!
மாணவன் - ராஜ கோ பால் ! சார்!
ஆசிரியர் - இனிமேல் சத்தியமா நாம் யார் கிட்டயும் பெயர் கேட்க மாட்டேன்!
ஆளை விடுங்க !
No comments:
Post a Comment