கணவன் மனைவி சண்டையை நிறுத்துவது எப்படி??
நாம் பேசும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது:
நிகழ்வு 1:
திடீரென கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை நீண்டு கொண்டு போனது....
கணவன்:
உனக்கு வாய் இருக்கிறதாலே எப்படி வேணும்னாலும் பேசலாமா..???? ஏன் காசுல சாப்டுட்டு என்னையே குறை சொல்றியா,திமிரு புடிச்சவளே…
மனைவி:
நான் ஒன்னும் சும்மா உங்க காசுல சாப்பாடு சாப்பிட்டு சும்மா இல்ல,வீடு வேலை பாக்குறேன் ,சமைக்குறேன்,உங்க துணி, கடைக்கு போறதுன்னு எல்லாம் நான் தான். என்னவோ நீங்க மட்டும் தான் எல்லாம் பண்ற மாதிரியும் நான் என்னவோ சந்தோசமா பார்க்,சினிமான்னு போற போல பேசறீங்க, அப்பவே உங்களை எங்க அம்மா சொன்னாங்க ,அத்தை சொன்னாங்கன்னு நான் தான் கேட்கல, உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடுஇருக்கே…
இப்படியே சண்டை நீயா நானானு போய்ட்டு இருக்கும்…முடிவு இல்லாம.
********************************************
நிகழ்வு 2:
திடீரென கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டையே நின்றுவிட்டது....
கணவன்:
நீ அழகா இருக்கிறதாலே எப்படி வேணும்னாலும், பேசலாமா..????
மனைவி ஒன்றும் பேசாமல்.... சமையலறைக்குள் சென்று சூடான தேநீரும்.!!!
சுவையான பக்கோடாவும்... கொடுத்தாள்.!!!
நீதி:
நாம் நோயுடன் போராடவேண்டும்.!!!
நோயாளியுடன் அல்ல..!!

No comments:
Post a Comment