மகள்:ஹலோஅப்பா…. எங்கே இருக்கீங்க…..
அப்பா:என்ன செல்லம்…. வெளியே இருக்கேன்டா…. என்ன வேணும் சொல்லு.. ஏதாவதுவாங்கிக்கினு வரணுமா…
மகள்:அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…. நீங்கசெய்யறவீட்டு வேலையெல்லாம் அம்மா, என்னை செய்ய சொல்றாங்க… சீக்கிரம் வீட்டுக்கு வந்து தொலைங்க.
சர்ப்ரைஸ் தாரேன் என்று கூட்டி போய்! என்ன கொடுமை சார் ! இது!
கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி...
திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.
பிறகு நடந்தவை...
“குட் ஈவினிங் குமார் சார்” - இது கேட்கீப்பர்.
உள்ளே வந்த மனைவி
“அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?”
குமார் “சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.”
பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர் “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?”...
குமார் சார் மனைவியிடம்..
“வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….”
அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி “என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?” .
ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க….
டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது “என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?...
பின்குறிப்பு:
குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....
இது கூட தெரியாத மக்கு பிளாஸ்திரியா இருந்து இருக்கேன்!
கணவன் - அது எப்படி டீ! ஒரே தேங்காய் சட்னியை ஒவ்வொரு நாளும் வேறு வேறு டேஸ்ட்டில் அரைக்க முடிகிறது!
மனைவி - ஐயோ! மூணு நாளைக்கு முன்னாடி அரைத்த சட்னி தாங்க! ஃப்ரிட்ஜில் வைத்து இருந்ததால் உங்களுக்கு தினம் ஒரு டேஸ்ட் தெரியுது!
அப்புறம் இன்னைக்கு கொஞ்சம் வாசம் வர மாதிரி இருந்துச்சு! நீங்க சாப்பிட்டு முடித்ததும் தூக்கி போட்டு விட்டேன்!
கணவன் - ??????
No comments:
Post a Comment