இந்த படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அவளது கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய வைரம் தெரியும்.
இது 254 கேரட் ஜூப்ளி வைரம் ஆகும் , இது உலகப் புகழ்பெற்ற
" கோஹ் - இ - நூர் " வைரத்தின் அளவு மற்றும் எடையிலும் இரட்டிப்பாக்கும்.
இந்தப் பெண் மெஹர்பாய் டாடா , அவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் சர் டோராப்ஜி டாடாவின் மனைவி.
1924 இல் உலகில் மந்த நிலை ஏற்பட்டு டாடா நிறுவனம் ( டிஸ்கோ ) ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாத போது , மெஹர்பாய் இந்த விலைமதிப்பற்ற ஜூப்ளி வைரத்தை இம்பீரியல் வங்கியில் ரூ 1 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
இதனால் ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்காகவும், மேலும் நிறுவனம் தொடர்ந்து இயங்குவற்காகவும், அடமானம் வைக்கப்பட்டது. மெஹர்பாய் டாடா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தார். அவரது அகால மரணத்திற்கு பிறகு , சர் டோராப்ஜி டாடா இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு
சிறந்த சிகிச்சை அளிக்க எண்ணி இந்த வைரத்தை விற்று டாடா மெமோரியல் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கினானார்.
அன்பிற்காகவும், மக்களின் நலன் கருதியும் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு .
முரண்பாட்டைப் பாருங்கள்.. தாஜ்மஹாலை காதல் நினைவுச் சின்னமாக பெருமை படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நமது மக்களுக்கு உயிர் கொடுக்கும் வரலாறு உருவாகிய அடிப்படை செய்தி கூட தெரியவில்லை..?

No comments:
Post a Comment