Saturday, 6 December 2025

சோம்பேறி

 சும்மா பினாயில் கொடுத்தால் கூட வாங்க கூடாத காலம் இது!

ஒரு ஊர்ல 4 சோம்பேறிங்க வேலை

வெட்டிக்கு போகாம.. சாப்பிட வழி

இல்லாம சுத்திட்டு இருந்தானுங்க.

அவனுங்களுக்கு சாப்பிட வழியே

இல்லாததால புற்களை சாப்பிட்டு

காலத்தை ஓட்டிட்டு இருந்தானுங்க 

ஒருநாள் ஒரு பணக்காரன் அந்த ஊர்

வழியா தன்னோட கார்ல போய்ட்டு

இருந்தான். அப்போ திடீர்னு

ரோட்டுக்கு பக்கமா ஒருத்தன் அங்க

இருக்குற புற்களை சாப்பிட்டு

இருக்குறத பார்த்து ஷாக் ஆகுறான்

தன் டிரைவர்கிட்ட கார நிறுத்த

சொல்லி அந்த புல் சாப்பிட்டு

இருக்குறவன் கிட்ட போறான் அங்க

என்ன நடக்குதுனா 

பணக்காரன் டூ சோம்பேறி

பணக்காரன் ~ ஏன் நீங்க இந்த புற்களை சாப்பிடுறீங்க ?? 

சோம்பேறிகள் ~ எங்க கிட்ட பணம் இல்லை அதான் இப்படி சாப்பிடுறேன் 

பணக்காரன் ~ அய்யோ பாவம் சரி என் கூட என் வீட்டுக்கு வாங்க 

சோம்பேறி ~ ஐயா    நாங்க 4 பேர்

இருக்கோம் அவங்களும் வரலாமா ?

பணக்காரன் ~ சரி கூட்டிட்டு வாங்க

சோம்பேறி ~ ஐயா உங்களை எங்க

உயிர் இருக்குற வர மறக்கவே

மாட்டோம் ரொம்ப ரொம்ப நன்றி

பணக்காரன் ~ அட பரவால்ல ப்பா.. சரி எல்லோரும் கார்ல ஏறுங்க 

( எல்லாரும் கார்ல ஏறிட்டாங்க அதுக்கு அப்புறம் என்னாச்சுனா 

சோம்பேறி ~ ஐயா எங்க 4 பேரையும்

உங்களோட கூட்டிட்டு போறதுக்கு

மறுபடியும் நன்றிங்க ..

பணக்காரன் ~ பரவால்ல இப்படி பசியால வாடிட்டு இருக்குறவங்களுக்கு நான்

உதவி பண்ணுவேன் இனி நீங்க

கவலைப்பட வேண்டியதில்ல ..

( எல்லாரும் இனி நல்ல சாப்பாடு

கிடைக்கப் போகுதுனு ரொம்பவும்

சந்தோஷமா இருக்காங்க. அந்த

பணக்காரனோட வீடும் வந்திருச்சு .

எல்லாரையும் தன் தோட்டத்துக்கு கூட்டிட்டு போன பணக்காரன் இப்ப

பேசுறான் அது என்னனா 

பணக்காரன் ~ நீங்க இனிமே ரோட்டுல வளர்ந்த புற்களை சாப்பிடணும்னு எந்த அவசியமும் இல்லை 

சோம்பேறிகள் ~ ஐயா.. தெய்வமே எங்க

கடவுளே‌‌.. நன்றியோ நன்றி 

பணக்காரன் ~ சரி சரி.. என் வீட்டுக்கு பின்னாடி 5 அடியில புற்கள் நல்லா பெருசா வளர்ந்திருக்கு போயிட்டு இஷ்டத்துக்கும் சாப்பிடுங்க 

சோம்பேறிகள்....!!


No comments:

Post a Comment