Monday, 14 January 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 1

ஆன்மீக  ஆனா, ஆவன்னா 

கேள்விகளால் ஒரு வேள்வி 

  அம்மா வந்திருக்காங்க.."

 மாணவிகளிடையே செய்தி வேகமாக பரவி அந்த பள்ளியே பரவசம் கொள்கின்றது. மூன்று நாட்கள் நம்மோடு இருப்பார்கள் என்ற செய்தி மாணவிகளுக்கு மாத்திரம் அல்லஆசிரியைகளுக்கும் மகிழ்ச்சிதான்!

அம்மாகிட்ட எதுவும் பேசலாம்..பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளலாம்..சிரிக்க சிரிக்க பேசுவார்கள்.கொஞ்ச நேரத்துல மனசு லேசாகிவிடும்..எல்லாருமே உற்சாகமாகிவிடுவார்கள்.

இன்றைய அவசிய தேவையான ஆன்மீக கல்வியை மாணவர்களுக்கு எளிமையாக சொல்லித் தருவதில் அம்மாவும் அவரது கணவர் அய்யாவும் தங்களது பெரும்பாலான நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அம்மாவைச் சுற்றி மாணவிகள் அமர்ந்துகொள்ள அம்மா ஆன்மீக கல்வியின் அவசியத்தைப் பற்றி சிறிது பேசிவிட்டு   " இப்ப நான் பேசியதில் உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்கலாம்  " என்கிறார்கள்.


மாணவிகள்  கேள்வி கேட்கத் தயங்குகிறாகள். 

அம்மா மறுபடியும் ஆரம்பிக்கின்றார்கள் -

" ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அது பற்றி கேட்டால்தானே விளக்கம் கிடைக்கும்...ஒரு விஷயத்தை சரியா தெரிஞ்சிக்காதவன் முட்டாள். அப்ப வாழ்நாள் முழுக்க முட்டாளாகவே இருக்க போகிறீர்களா?

பௌதீகத்திற்காக  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி இசிடார் ரபி ( Isidor  Rabi ) பத்திரிகை பேட்டியின்போது தன வெற்றிக்கான காரணத்தை சொல்கின்றார் -


என் சிறுவயதில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியவுடன் என் தாய் மற்ற  தாய்மார்களைப் போல என்னிடம் இன்று நீ என்ன கற்றுக் கொண்டாய் என கேட்கமாட்டார்கள். இன்று ஆசிரியரிடம் என்ன நல்ல கேள்விகள் கேட்டாய் என்று விசாரிப்பார்கள். கேள்விகள் கேட்டே என் அறிவை வளர்த்துக் கொண்டேன். விஞ்ஞானியானேன். 

சூரியன் FM ரேடியோ ஸ்லோகன் -" கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க "  இதை நம்ம எப்படி எடுத்துக்கொள்வதென்றால் 

.
முதல் "கேளுங்க" வுக்கு அர்த்தம் - நான்  சொல்றத காது கொடுத்து கவனமா கேளுங்க.


அடுத்த " கேளுங்க" வுக்கு அர்த்தம் நான்  சொன்னதுல உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை  கேளுங்க..


"கேட்டுகிட்டே இருங்க" ன்னா உங்களுக்கு எது தேவையோ அதை கேட்டுகிட்டே இருங்க...


கேட்டாதான் கிடைக்கும்..


முட்டாள்தனமான கேள்விகள் என்பதே கிடையாது,,,ஆனால் முட்டாள்தனமான பதில்கள் இருக்கலாம்.

கேட்கப் படாத கேள்விகள்தான் முட்டாள்தனமான கேள்விகள்! 

சரி, மாணவிகளே..இப்ப கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க "

சொல்லிமுடித்த உடனேயே  மாணவிகள்  கேள்விகளை  கொட்ட  ஆரம்பிக்கின்றனர்  -

நாங்கள்தான் தினமும் சாமி கும்பிடுகின்றோமே, அப்புறம் ஏன் தியானம் பண்ணவேண்டும் ?

தியானம்ன்னா  என்ன ? சாமி கும்பிடுவதற்கும், தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

சாமி உண்மையிலேயே இருக்கா?

கடவுள் எல்லா இடத்துலேயும் இருக்கிறார்ன்னு சொல்றாங்களே, எப்படி, எந்த உருவிலே இருக்க முடியும்?

வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் சாமி கண்ணைக் குத்தி விடுமா?

சாமி கும்பிடுபவர்கள், மத சின்னங்களை அணிந்தவர்கள் ஆன்மீகவாதிகளா? 

கடவுள் வாழ்த்து பாடுகிறோமே,  ஏன் கடவுளை வாழ்த்த வேண்டும்?

இஷ்டபடி வாழ விரும்பும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
வீணாக ஏன் இதில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

ஆன்மீகத்திற்கும், ஆத்திகத்திற்கும் என்ன வித்தியாசம்?

கடவுள் ஒருவர்தான் என்றால் ' தான்தான் கடவுள் அவதாரம் '  என்று நாட்டில் பலர் இருக்கின்றார்களே?

அம்மா கைகளை உயர்த்தி " சபாஷ் மாணவிகளே!  இன்றைக்கு இவ்வளவு போதும்...நீங்கள் கேட்டிருக்கும் அத்தனையும் மிக நல்ல வினாக்கள். நல்ல கேள்விகளை கேட்பவர்கள் வெற்றிப் படிகளில் ஏற ஆரம்பித்து விடுகின்றனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். முதலில் சாமி கும்பிடுவது பற்றி பார்க்கலாம்" என்கிறார்கள்.

- தொடரும் 

**************************************************************************************************


ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் யாரும் இல்லை

நான் என்ற எண்ணம் -
கொண்டமனிதன் வாழ்ந்ததில்லை
முன்னேற்றம் என்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதினாலே!    - கவிஞர் வாலி 

நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்விகளே 
நம்மை உருவாக்குகின்றது  -  ஞானியார் 

35 comments:

  1. ...waiting for answers now :))

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பதில்கள் கிடைக்கும்.
      முதல் அத்தியாத்தில் கேள்விகள் கேட்கலாம்.

      Delete
  2. .....ditto... (to sundu's comment)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பதில்கள் கிடைக்கும்.
      முதல் அத்தியாத்தில் கேள்விகள் கேட்கலாம்.

      Delete
  3. I have 2 Qs...
    what is வேள்வி?
    what is ஆத்திகம்?

    ReplyDelete
    Replies
    1. வேள்வி - யாகம்
      ஆத்திகம் - கடவுள் இருக்கிறார் என்று நம்புவர்கள்

      Delete
    2. what is யாகம்??

      Delete
    3. யாகம் - ஹோமம் ( திருமணம், கிரஹப்பிரவேசம் போன்ற நாட்களில் நடத்தப்படுவது )

      Delete
  4. Suryan FM would love your interpretation of their slogan.

    What is ஆன்மீகம்?

    ReplyDelete
    Replies

    1. நன்றி...

      ஆன்மாவை உணர்வதற்கான மார்க்கம்.

      Delete
    2. what is ஆன்மா

      Delete
    3. முதலில் அரிச்சுவடியை முடித்துவிட்டு ஆன்மாவைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்!

      Delete
  5. Ooops! i knew you'll answer abt it in due course of months...but the general overview of the subject would help to ask the Q or any Q's can be asked?

    ReplyDelete
    Replies
    1. கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க!

      Delete
    2. சவாலே சமாளி!

      Delete
    3. well, in that case, you need to explain - How ஆன்மீகம் is better than Anushka Sharma & Why ?

      Delete
    4. pardon me for the interruption here...
      Anushka Sharma!!! Seriously!?!?!?!?!?!?!?!?

      Delete
    5. அனுஷ்காவைத் தெரிஞ்சுவச்சுருக்கிற அளவு ஆன்மிகம் புரிஞ்சுகிட்டு அப்புறம் இந்த comparison க்கு போகலாம்!

      இப்ப அரிச்சுவடியை நல்லா கத்துக்க 'ஆனா, ஆவன்னா'வை நூறு தடவை இம்போசிசன் எழுதவும்

      Delete
    6. hahaha...
      i guess every class has a clown!! :)
      who knows...instead of writing 'ஆனா, ஆவன்னா', someone may be writing 'Anushka Sharma' 100 times :)

      Delete
  6. There are no right or wrong answers to many of the questions above as they are based on one's life experiences and beliefs..

    I have a request..
    Just like the students in your classroom, the younger generation here will also benefit from your ஆனா, ஆவன்னா class. Can you teach your class in English for their benefit?

    ReplyDelete
    Replies
    1. We will definitely find the correct answers!

      Request accepted.

      Delete
  7. I've a question, after learning about different meditations, introspection....etc in Vethathrium, we still have to follow rituals and other things to teach our children about our culture ...... though we know the reason behind them.. is it ok?

    ReplyDelete
    Replies
    1. We, the social animals, are always struggling between habits and wisdom in our lives.So our consciousness is/was only engaged in and obedient to sensory perceptions for a long period, will power and self awareness have become dormant or barely apparent - Maharishi

      Let us discuss this at a later stage.

      Delete
    2. can't wait to talk about rituals....i have too much to say!!!

      Delete
    3. எந்தெந்த காலத்தோ இடம், காலம், தேவை

      இவையொப்பத் தோன்றின எத்தனையோ செயல்கள்

      அந்த செயல், அக்கருத்து இன்று சிந்தனைக்கோ

      அனுபவத்திலோ துன்பம் அளிக்குமெனில் தவிர்ப்போம்.

      - வேதாத்திரி மகரிஷி

      There will be a separate chapter for Rituals after learning ஆனா, ஆவன்னா.

      Delete
    4. haha...i'm sure you know i didn't understand anything :)

      Delete
    5. Vazhga Valamudan Maharishi!!!

      Delete
  8. Great attempt in explaining the intricate concepts with a light hearted approach. Hats off JP you are the need of the hour !!!

    ReplyDelete
  9. Great attempt in explaining the intricate concepts with a light hearted approach. Hats off JP you are the need of the hour !!!

    ReplyDelete
  10. Great attempt in explaining the intricate concepts with a light hearted approach. Hats off JP you are the need of the hour !!!

    ReplyDelete