Sunday, 14 April 2013

விஜய - தமிழ் புத்தாண்டு


தமிழ் வருடங்கள் 60ல் விஜய வருடம் 27ஆம் ஆண்டாக வருகிறது.

இந்த ஆண்டின் பெருமை என்னவென்றால் விஜய ஆண்டுதான் என் பிறந்த ஆண்டு. அதாவது எனக்கு இப்போது அறுபது வயது நடந்து கொண்டிருக்கின்றது!

ஜயம் என்றால் வெற்றி. விஜயம் என்றால் மிகப் பிரமாண்டமான வெற்றி. இந்த விஜய வருடத்தில் எந்தச் செயலைத் துவக்கினாலும், அது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கவல்லது என்கின்றன ஞான நூல்கள். சூரியன் உதயமானதும், இருள் விலகி எப்படி வெளிச்சம் பாய்கிறதோ, அதேபோல், விஜய வருடம் துவங்கியதும் மங்கல காரியங்களும் சத் காரியங்களும் வரிசைகட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

விஜய வருஷத்திய பலன் வெண்பா

"மண்ணில் விசய வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங்க ளெங்குமே நண்ணும்
பயம்பெருகி நொந்த பரிவாரமெல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு".

மேற்கண்ட இடைக்காடர் என்ற சித்தர் பெருமானின் பாடலின் படி இந்தாண்டு மழை அதிகம் பொழியும். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, உளுந்து, கொள்ளு, மொச்சை, பச்சை பயிறு உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் புஞ்சை, நஞ்சை தானியங்களும் நன்கு விளையும். என்றாலும் மக்கள் இரத்த பந்தங்களிடமிருந்து விலகி நிற்பர். மனதில் ஒருவித அச்சம் இருக்கும் எனக் கூறியுள்ளார்.


( ஜோதிடர் திலகம் ஜலீல் பிப்ரன் அவர்கள் இலவச சேவையை ரத்து செய்து விட்டதால் புத்தாண்டு பலன்கள் வெளியிட இயலவில்லை).


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

3 comments:

  1. இனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. JP, how much pay for புத்தாண்டு பலன்?

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete