ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் ரவீிந்திர ஜடேஜாவை
வைத்து அனைவரும் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டனர்.
Sir Jadeja is entering... |
ரஜினி சாருக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்த கடவுள் சர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார்.
பயிற்சிக்காக மதியம் 3 மணிக்கு கிளம்பினால் சர் ஜடேஜா பயிற்சி பெற ஸ்டேடியமே அவரைத் தேடி வருகிறது.
சர் ஜடேஜா பந்தை பிடிக்க செல்லத் தேவையில்லை பந்தே அவரது கையில் வந்து சேரும்.
சர் ஜடேஜா ஜீப் ஓட்டினால் அது ஓடாது ரோடு ஓடும்.
In honour of Sir Sir Ravindra Jadeja, 52 days of a year are celebrated as ‘RAVI'var!
- சர் ரவீந்தர் ஜடேஜா பேட்டிங் பண்ணும்போது ஸ்டைன் வீசின பந்து பேட்டில படாம அவரு உடம்பில பட்டுடுச்சு. அப்புறம் எங்க தேடியும் அந்த பந்தைக் காணவே இல்லை. பேட்டில பட்டிருந்தாகூட சிக்ஸ்ஸோட போயிருக்கும், சர் உடம்பில பட்டது கிடைக்குமா?
- சென்னைல நடந்த சென்னை சூப்பர்கிங்க்ஸ் VS பெங்களூர் மேட்ச் முடிஞ்சுட்டு மும்பையோட விளையாட மும்பைக்கு பிளைட்ல போயிட்டிருந்தாங்க. அப்போ டமால்னு ஒரு சத்தம். என்னடான்னு பார்த்தா கிரிக்கெட்பால் விமான இறக்கைல விழுந்திருக்கு. சர் மேட்ச்ல அடிச்ச சிக்ஸர்ல மேலே போன பால் இப்பத்தான் திரும்பியிருக்கு
- நீ ஏன் இந்த மேட்ச்ல விக்கெட் எடுக்கலேன்னு தோனி கேட்டதுக்கு உடனே கோவத்தோட போய் மூனு விக்கெட்டையும் தூக்கிட்டு வந்திட்டார் சர்.
- எல்லோரும் ஒரு கிலோ பெட்டிய தூக்கிட்டு வரும்போது ஒரு டன் (TON) பேட்டை தூக்கிட்டு வந்த அவருதாண்டா சர்.
- ஒருநாள் எதிர்பாராவிதமா அதிசயமா சர் ஜடேஜா போல்ட் ஆகிட்டார். ஆச்சர்யம் தாங்காம அம்பையர் ரெண்டு கையையும் தூக்கிட்டார்.
- சர் ஏன் ஐபிஎல்ல அதிக விக்கேட்டோ அதிக ரன்னோ எடுக்கல தெரியுமா? ரெண்டையும் செஞ்சு ஆரஞ்சு கேப், ப்ளூ கேப் ரெண்டையும் தலைல எப்படி போட்டுக்க முடியுங்கிற குழப்பத்திலதான்.
- ஒருநாள் ரவிந்தர் கிரவுண்டு முழுவதையும் சுத்திகிட்டு இருந்தார். பயிற்சியாளர் வந்து ஏன்னு கேட்டதுக்கு “CSK டீமுக்கு ஆல்ரவுண்டர் தேவையாம், அதான்” என்றார். அப்படித்தான் சென்னை ஜடேஜாவை டீமுக்குள்ளே எடுத்ததாம்
haha...this is more refreshing compared to the same old same old Rajini jokes!
ReplyDelete