Saturday, 5 April 2014

NATURE....3



மின்னல்

     மின்னல் (Lightning) என்பது மழைக் காலங்களில் மேகங்களின் இடையே ஏற்படும் உராய்வினால் உருவாகும் ஒளிக்கீற்று ஆகும். கண்ணைப்பறிக்கும் ஒளியோடும், பேரொலியோடும் கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி. காற்றில் மின்னலின் வேகம் மணிக்கு 2,20,000 கி.மீட்டர் ஆகும். 30,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் மின்னலின்போது உருவாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
      
கரிய மழை மேகங்களில் இருக்கும் அணுக்கள், மேகங்கள் ஒன்றோடொன்று உராய்வதால் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டம் பெற்ற மேகக் கூட்டங்கள் அருகே வரும்பொழுது ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின்னாற்றல் பேரொளி வடிவாய் பாய்கின்றன. சில சமயங்களில் இந்த மின்னலானது நிலத்தில் பாய்ந்து பலத்த சேதத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
     
இவ்வாறு தோன்றும் ஒவ்வொரு மின்னலிலும் ஒரு பெரிய நகரத்திற்கு ஒரு ஆண்டிற்குத் தேவையான மின்சாரம் உருவாகிறது. அப்படி உருவாகும் மின்சாரத்தைச் சேமிக்க இயலாது என்பதால் அவை வீணாகின்றன. வானில் பறக்கும் விமானங்கள் மின்னல் உருவாகும் உயரத்திற்கும் மேல் பறப்பதால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. இருந்தும் சில விமான விபத்துகள் மின்னலால் நிகழ்கின்றன. ஒரு ஆண்டில் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் மின்னல்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மின்னல் பற்றிய படிப்பு Fulminology எனப்படுகிறது.

No comments:

Post a Comment