மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். அருவியை நினைக்கும்பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். "வீங்குநீர் அருவி வேங்கடம்" என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர். "பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே" என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. "தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்" என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி.
நீர்வீழ்ச்சி என்பது waterfall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழிபெயர்ப்புபோல் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment