கோயில் ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்,
ஒரு பெரியவர். அவ்வூரைச் சேர்ந்த நாத்திகவாதியான தாசில்தார் ஒருவர்,
அந்தப் பெரியவரிடம் செ ன்று, " ஐயா! கல்லை கடவுள் என்கிறோம்.
எங்கோ கிடந்த ஒரு கல்லைக் கொண்டு வந்து, அதற்கு ஒரு உருவம்
கொடுத்து, நாம் வைத்த கல்லை நாமே வணங்கி, 'என் னைக் காப்பாற்று!'
என்று வேண்டுகிறோம். இது எவ்வளவு முட்டாள்தனமான காரியம்.
அந்தக் கல்லுக்கு எங்கிருந்து சக்தி வரும்? அது எப்படி மற்றவர்களைக்
காப்பாற்றும்?" என்றார்.
அதைக் கேட்ட பெரியவர் அமைதியாக, "தங்களுக்கு இந்த தாசில்தார்
பணி கிடைப்பதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று
கேட்டார்.
"சும்மாதான் இருந்தேன்".
"நீங்கள் சும்மாயிருந்தபோது உங்களை யாராவது மதித்தார்களா?
தாங்கள் போடும் கையொப்பத்திற்கு ஏதாவது மதிப்பிருந்ததா? இல்லை
அல்லவா! அதே நேரத்தில் தாசில் தார் என்ற ஒரு பதவி தங்களுக்குக்
கிடைத்த பிறகு தாங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்துக்கும்
எவ்வளவு மதிப்பு, மரியாதை! இந்த மதிப்பும், மரியாதையும்
அதிகாரமும் எங்கிருந்து வந்தது?
அதேபோலத்தான் எங்கோ கிடந்த கல், தெய்வ உருவத்தில்
வடிவமைக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு
தினமும் மந்திரங்களை உச்சரிக்கும்போதும், மக்கள் வழிபடும்போதும்
அதற்கு கடவுள் என்ற சக்தி வந்துவிடுகிறது. அந்த சக்தி மற்றவர்களைக்
காப்பாற்றுகிறது" என்றார்.

No comments:
Post a Comment