சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள்.
-லீஹண்ட்
ஒருவன்
அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான்.
அந்தப்
பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த
கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
உடனே சர்வரை
அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும்
கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான்.
சர்வர் முதலில் மழுப்பினான்.
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம்
குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன்.
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
No comments:
Post a Comment