எல்லோருக்குமே ஜோதிடத்தில் ஆர்வம் இருப்பதால் மேலும் சிந்தனையைத் தூண்ட கீழ்கண்ட கட்டுரையை ( சுருக்கப்பட்டுள்ளது ) செப்டம்பர் 1999ல் வெளியிட்டேன்.
நிறைய கடிதங்கள் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தன.
15 ஆண்டுகளுக்குப் பிறகு எனது blog ல் வெளியிடுகின்றேன். படிப்பவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் இது பற்றி மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
கிழமையைக் கொண்டு கணிக்கப்படும் ராகுகாலம், எமகண்டம், குளிகை, சூலை, ஹோரை போன்ற பலவற்றைப் பெரும்பாலோனோர் பின்பற்றி வருவதைக் காண்கின்றோம். குறிப்பாக ராகுகாலத்தில் நல்ல காரியங்கள் துவங்கக்கூடாது என்பதைக் கடைபிடிப்பவர்கள் ஏராளம். இதில் அர்த்தம் உள்ளதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளுமுன் கிழமை பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
கிழமை எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என ஆராயும்போது சில அறிய தகவல்கள் கிடைத்தன. இராமாயணத்தில் ராமர் ஜனனத்தை ஜாதக சுத்தமாகக் குறிப்பிடும் வால்மீகி, ராமர் பிறந்த கிழமையைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. மகாபாரதத்தில் வேத வியாசரும் கிருஷ்ணர் பிறந்த நேரம், நட்சத்திரம், திதி, லக்னம் இவற்றை விரிவாகச் சொன்னாலும், கிருஷ்ணர் பிறந்த கிழமையைக் குறிப்பிடவே இல்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில்
வாழ்ந்த வான சாஸ்திர விற்பன்னர் பாஸ்கராச்சாரியாரின் சுலோகம் ஒன்றிலிருந்துதான் கிழமை துவங்கப்பட்ட வரலாற்றினைத் தெரிந்து கொள்கின்றோம். அவர் கூற்றுப்படி கலியுகம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது.
அதற்கு முன் கிருஷ்ணர் காலத்தில், ராமர் காலத்தில் கிழமை வழக்கத்தில்
இல்லை எனப் புரிந்து கொள்ளலாம் ( கலியுகம் வியாழன் மாலை துவங்கியது என்ற வாதமும் உள்ளது ). இப்போதுள்ள கலியுகம் துவங்கி 5114 ஆண்டுகள் முடிந்துவிட்டன. கலியுகம் முடிவதற்கு இன்னும் 4,26,876 ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கலி முற்றிவிட்டது என புலம்புகின்றோம்.
பூமி தோன்றி 4 1/2 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என நிபுணர்கள் கூறுகின்றனர். ( 1 பில்லியன் - 1,000,000,000 ஆண்டுகள் ). நமது சூரியன் தோன்றி 6.254 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிட்டுள்ளார்கள். தற்போதைய கலியுகம் வெள்ளிக்கிழமை துவங்கியதாக எடுத்துக் கொண்டு கடந்த 5124 ஆண்டுகளை ஆராயும்போது ஏழு கிழமைகள் கொண்ட வாரக் கணக்கு பூமியில் பலப்பல இடங்களில் பல்வேறாக பயன்படுத்தப்பட்டு அவ்வப்போது மாற்றங்களும், சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு வந்துள்ளது. நமது நாட்டில் பாஸ்கராச்சாரியாரும், ஆரியபட்டரும் சில மாற்றங்களை செய்துள்ளனர்.
ஜூலியஸ் ஸீசர் காலண்டரில் ஏற்பட்ட சில தவறுகளைச் சீர் செய்ய கி.மு.49 ஆண்டினை 445 நாட்கள் கொண்ட குழப்ப ஆண்டாக அறிவித்தார் ( Year of Confusion ).
உலகம் முழுதும் காலனிகள் அமைத்து ஆண்ட ஆங்கிலேயர்கள் எல்லா இடங்களிலும் ஒரே கிழமை, ஒரே தேதி பின்பற்ற பலமுறைகள் காலண்டர்
சீர்திருத்தம் செய்துள்ளனர். மேலும் ஏற்பட்ட குறைகளைக் களைந்து புதிய காலண்டரை அமைத்தவர் போப் கிரிகோரி. இவர் 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதிக்குப் பிறகு 15ம் தேதியாக அமைத்தார். இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் காலண்டர் கிரிகோரி காலண்டரே.
கலியுகம் துவங்கியது வெள்ளியா அல்லது வியாழனா என்ற சர்ச்சையே இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 5124 ஆண்டுகளில் பலப்பல தடவைகள் இக்கிழமை வரிசைகள் மாற்றப் பட்டுள்ளதாக அறியப் படுகின்றது. 1-9-2014 அன்று ஞாயிற்றுக் கிழமை வருகின்றது. அன்று உண்மையிலேயே ஞாயிற்றுக்கிழமைதானா அல்லது வேறு கிழமையா என்று உறுதிபடுத்த யார் உள்ளார்கள்!
எனவே கிழமை ஒட்டிய பழக்கங்கள், சடங்குகள் உண்மையில் தேவைதானா....சிந்திக்க வேண்டுகின்றேன்!
அடுத்து ராகுகாலம் பற்றி.....
- தொடரும்
is this the article you told me about few years ago?
ReplyDeleteand you know me.... i don't believe in any rituals
yeah...
Deleteநாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும்.....
exactly what i believe...
Deletewe bring forth fortune and misfortune with our thoughts and deeds.... cannot blame raagukaalam and emakandam for that :)
even misfortune is sometimes fortune in disguise :)
ha...my favorite topic :)
ReplyDeleteMany cultures follow astrology but as far as I know, it is more influential and widespread and misused in India than in any other country..
From Rabindranath Tagore's poem:
...
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
...
Into that heaven of freedom, my Father, let my country awake"
There are people who observe ragukalam, etc during nights also!
DeleteFor any serious seeker, one way to logically arrive at day of a week is to relay on the great sage Thirumular's observation that the breathing oscillates between left and right nostril on new and full moon day on Thursdays.
ReplyDeleteWhile there exists a space without time, as long as it is still not in one's experience one is bound by time.
Just like seconds, minutes, hours, day and night just to facilitate and keep track of seasons (environmental cycle) we have weeks, months, years etc... They are milestones to facilitate and infer progress.
Influence of celestial beings like the planets, satellites, stars are all real but temporary until enlightenment happens as they are all part of universal consciousness.
There is an interesting recorded history.... I am not sure how many are aware that we lost few days few centuries back owing to intervention from the then rulers ( kings & queens
There are historical evidence that 11 days were lost September 3 rd to 13th in 1752... C
ReplyDeleteபோப் கிரிகோரி 1582ல் உருவாக்கிய காலெண்டர் ஐரோப்பாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக கடைபிடிக்க நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் 1752 செப்டம்பர் முதல் கடைபிடிக்கத் துவங்கியது. ரஷ்யா, கிரீஸ் போன்ற நாடுகள் 1900க்கு பிறகுதான் கிரிகோரி காலண்டரைக் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
Deleteபோப் கிரிகோரிக்கு காலண்டர் சீர்திருத்தம் செய்யவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? Good Friday எந்த தேதியில் என்பதில் ஏற்பட்ட குழப்பம்!
அமெரிக்க்காவின் முதல் ஜனாதிபதி பிறந்த நாள் எது தெரியுமா?
ஜூலியன் காலண்டர்படி 11-2-1731
கிரிகோரி காலண்டர்படி 22-2-1732
நியுமராலஜிபடி அவருக்கு எது அதிர்ஷ்ட கல்? ஜாதகம் இரண்டில் எதை வைத்துக் கொள்ளலாம்?
கிழமை மாத்திரம் அல்ல, தேதிகளிலும் தவறுகள் உள்ளன. இப்போது சொல்லுங்கள் - நியுமராலஜியை நம்பலாமா?
Oh...ok, so this was the reason why the 11days were removed from the calendar in 1752. Thanks for sharing this.
ReplyDelete