Friday, 7 November 2014

இன்ப ஊற்று....2




இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே

ஏற்பட்டும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்?
நன்மை தரும் நவகோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துபோல்
தன்மயமாய்த் தான் அதுவாய் தவறிடாதியக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆன்ந்தமே.


விளக்கம் :

பேரியக்க மண்டலம் முழுவதும் நீக்கமற நிறைந்து எல்லா இயக்கங்களையும் திருவிளையாடலாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் வியத்தகு மறைபொருள் காந்தம்.அந்தக் காந்தத்திற்கும் உட்பொருளாக இருப்பு நிலையாக அமர்ந்து காந்த தன் மாற்றங்களாகிய அழுத்தம்,ஒலி,ஒளி,சுவை,மணம்,மனம் என்ற ஆறு விளைவுகளாகி உயிர்கட்கெல்லாம் வாழ்க்கை இன்பத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் உன்னை "இன்ப ஊற்று என நிறைந்த இறைவா" எனும் போது உண்டாகும் எனது இன்பப் பெருக்கை எவ்வாறு வார்த்தைகளால் உணர்த்துவேன்.

விண்துகள்களின் கூட்டுதான் பஞ்சபூதங்கள் என்றாலும்,விண்,வெளி என்ற இரண்டின் விகிதாரச் கூட்டுக்கேற்ப ஒவ்வொரு பெளதீகப் பிரிவும்(பூதமும்) காந்த அலையின் தன்மையில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது.அதற்கேற்ப அழுத்தம்,ஒலி,ஒளி,சுவை,மணம் இவற்றின் அளவும் அதன் விளைவுகளும் ஒவ்வொரு பெளதீகப் பிரிவிற்கும் வேறுபடுகிறது.இத்தகைய பெளதீகப் பிரிவுகளை ஒவ்வொரு அளவில் கூட்டாகப் பெற்று,சூரியனைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பன ஒன்பது கோள்கள்.உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் வாழ்வின் இன்பத்திற்கு வேண்டிய காந்த அலைகளை ஓயாமல் பரப்பிக் கொண்டிருப்பன நவகோள்கள்.எல்லாக் கோள்களும் வீசும் காந்த அலைகள் உயிர்களுடைய நன்மைக்கேயாகும்.இந்த ஓன்பது கோள்களையும் நட்சித்திரங்களாக சூரியன்களையும் காணும்போது எனது உள்ளம் அவையெல்லாம் அளவு தவறாமல் ஆடும் நடனத்தைப் போல,நெறி பிறழாமல் உலவி வருவது கண்டு உவப்பு பெறுகிறது.

இறைவா நீயே உனது துண்டுப்பட்ட பகுதி நிலையில் பேரியக்க மண்டலத்தில் இயங்கும் பொருட்கள் எல்லாமாக இருப்பதால்,உனது தன்மை அனைத்தும் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ளதை உணர்கிறேன்.தானே அதுவாக (Force and Consciousness) கொண்டு அணு முதல் அண்டங்கள் அனைத்தும் நெறி தவறாது இயக்கி வருகிறாய்.இந்த உண்மையினை உணர்ந்து உணர்ந்து அதில் லயமாகுந்தோறும் அந்த மன நிலையே எனக்கு உயர்ந்த தவமாக அமைகிறது.மனிதனே அவன் மனதுக்கு அடித்தளமாக உள்ள இறை நிலையை உணர்ந்த அந்த விழிப்பிலே அடையும் பேரானந்தம் அல்லவோ இது.

No comments:

Post a Comment