Tuesday, 11 November 2014

சங்கல்பம் ...4 ( Autosuggestion )

சங்கல்பம் என்பது என்ன ?

மகரிஷி :

அறநூல்களைப் படிக்கும் போதும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறைக் கேட்கும் போதும் நாம் பெறவேண்டிய பண்புகளின் பட்டியல் நீளும் அனைத்துப் பண்புகளும் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலும் தோன்றும். அனைத்துப் பண்புகளையும் ஒரு சேரப் பயிற்சி செய்து பின்பற்ற முடியாது. நாம் அடையக்கூடிய பண்புகளைப் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். எந்தப் பண்பு முதலில் அடைய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அப்பண்பை அடைய நாம் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்....

சங்கல்பம் என்பது மனதிற்கு தான் இடும் கட்டளை. தனது மனதிற்கு இவ்வாறு கட்டளையிடும் போது தான் சோம்பல், தள்ளிப்போடுதல் போன்ற தமோகுணங்களிளிருந்து விடுபட்டுச் செயல்படும்.

மனதிற்கு அதிக சுதந்திரம் கொடுத்தால் அது பயிற்சியில் உறுதியுடன் ஈடுபடாது .பயிற்சியை ஒரு நோன்பு போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் இப்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஏற்படும்.

உதாரணமாக தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மேம்போக்காக முடிவு செய்து கொண்டால் குறுகிய காலத்திலேயே உடற்பயிற்சி விட்டுவிடப்படுகிறது.

அதையே ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு, " தினந்தோறும் காலை உடற்பயிற்சி செய்த பிறகே காலை உணவு எடுத்துக் கொள்வேன் " என்று உறுதி எடுத்தக் கொண்டால் அவரால் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்க முடியும்.

சங்கல்பம் நற்பண்பைச் சாதனையுடன் மனதைப் பிணைக்கிறது . சங்கல்பத்தின் மூலம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவில்லை என்றால் மனம் எளிதில் சாதனையிலிருந்து விலகி விடும்.

தன்னை அறியாமல் மனதில் பல சங்கல்பங்கள் தோன்றி அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல் விளைவை அனுபவிக்கிறோம். மனதிக்கு நற்பண்புகளை சங்கல்பமாக கொடுத்து பயிற்சி செய்யும் போது அப்பணியைப் பெற்று மேன்மை பெறுகிறோம்

No comments:

Post a Comment