Sunday, 16 November 2014

ஆசை....7

ஆசைநிறைவேறும் 
ஆசை எழும்போது, அதாவது ஏதோ ஒரு பொருளை நாம் விரும்பும் போது அறிவிலே விழிப்போடு இருக்கவேண்டும். தவறினால் பல தீய விளைவுகள் உண்டாகும். வாழ்க்கையில் எளிதில் தீர்க்கமுடியாத பல சிக்கல்கள் தோன்றிவிடும். ஒரு பொருள் மீது ஆசை எழும் போது அதனோடு உறவுகொண்டு, கண்டமுன்அனுபவம், தற்காலச்சூழ்நிலை, எதிர்கால விளைவு இம்மூன்றையும் ஒன்றிணைத்து நோக்கவேண்டும். அப்போதுதான் அறிவு தனது நிலை பிறழாது, மயக்க முறாது, நலம் என உணர்ந்தால் அளவோடு, முறையோடு அப்போருளைப் பெறவும், துய்க்கவும் முயலவேண்டும். அறிவில் விழிப்போடு இருக்கும் வரையில் மாணாமன நிலை என்பது எது? 
ஒருவருக்குப் பலபொருட்கள் மீது விருப்பம் எழலாம். அவற்றை வரிசையாகக் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருளின் தேவை இன்றியமையாததா, அதனை அடையத் தனது ஆற்றலும், சூழ்நிலைகளும் ஒத்து இருக்கின்றனவா? கணிக்கும் அல்லது எதிர் பாக்க்கும் விளைவுகள் என்ன? இவற்றைக் கொண்டு சிந்தனை செய்யுங்கள். 
தேவையும், ஆற்றலும், சூழ்நிலையும், விளைவாகக் காணும் நலனும் ஒத்திருந்தால் அதனை அடைய முறையான முயற்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயலாற்றி வெற்றி பெறுங்கள். இல்லையெனில், ‘இன்னின்ன நிலைமைகளால் இந்தப் பொருள் மீது ஆசை கொள்ளுதல் தவறு, எனவே இந் தஆசையை நான் நீக்கிக் கொள்கிறேன்’ என்று பல தடவை காலை, மாலை அதற்கென உட்கார்ந்து தானே மனதிற்குள் உறுதி கூறிக் கொள்ள வெண்டும்.சில குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி இவ்வாறு முடிவு செய்து கொண்டால் மீண்டும் பிற பொருள் மீது முறையற்ற அவா எழாது. நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் நன்கு வளர்ச்சி பெறும். அடுத்தடுத்து வாழ்வில் வெற்றிகள் பல கிட்டும். வாழ்வில் முழு அமைதியும் பெறலாம். இவ்வழியில் ஆசையை முறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment