Friday, 14 November 2014

பெண்கள் - 9


மகளிரும் ஆன்மீகமும் 

வாழ்கையானது ஆண், பெண் என்ற இருவரும் இணைந்து தான் நடைபெருகின்றது. இந்த உலகில் எல்லோருக்கும்மே இந்த இரண்டு பேர் கூட்டுறவில் தான் பிறவி தோன்றுகிறது. என்றாலும் கூட ஒரு சில காரணங்களால் உலகெங்குமே ஆண்கள் மேலோங்கவும் பெண்கள் கீழாக மதிக்கப் பெறவும் ஒரு சந்தரப்பம் இருந்தது.

காலத்தால் அந்த சந்தர்ப்பம் போனபிறகு கூட, வழக்கத்தை ஒட்டி, பழக்கத்தை ஒட்டி அதே ஆதிக்க மனப்பான்மை ஆண்களுக்கு ஏற்பட்டுத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.  ஒரு சமுதாயாம் திருந்த வேண்டுமானால் இந்த குறைபாடுகள் நீங்கத்தான் வேண்டும். அந்தக் குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்க்கு ஒரு சாரார் மட்டும் – ஆண்கள் மட்டுமோ, அல்லது பெண்கள் மட்டுமோ- முயன்றால் போதாது. இரண்டு பேர்களுமே அந்த குறைபாடுகளை உணர வேண்டும், அவற்றை முறையாகப் போக்கிக் கொள்கின்ற விருப்பம் அவர்களுக்கு வரவேண்டும்.

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டீர்களனால் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும், அந்தக் குடும்பத்திலே நல்ல குழந்தை பிறக்க வேண்டும், அந்தக் குழந்தை அறிவுடையவனாக, சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வேண்டும். குடும்பத்திற்கு நல்ல உறு துணையாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகிறோம். அப்படியானால் அந்தக் குழந்தைப் பேறுக்கு உரிய ஆண, பெண் இருவருமே சம உரிமை, அறிவிலே திறமை, நுட்பம் இவை நிறைந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும்.

ஆண்களுக்கு மாத்திரம் சில கல்வி வசதி, செல்வ வசதி இன்னும் அதிகார வசதி எல்லாமே வைத்துக் கொண்டு பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டால் என்ன ஆகும்? ஒரு புறம் அறிவிலே அல்லது செல்வத்திலே, மற்ற எல்லாவற்றிலும் எழுச்சி, மற்றொரு புறத்திலே எல்லாவற்றிலும் தாழ்ச்சி, அங்கே பிறக்கக்கூடிய குழந்தைகூட அப்படித்தான் இருக்கும். இந்த ஏற்றத் தாழ்வினை நீக்கிக் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment