Wednesday, 12 November 2014

AWARENESS....2


 
கடமையில் விழிப்புணர்வு 

பிறருக்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான் , அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை .

அப்படித் தகுதியுடையவர்களாயிருப்பினு
ம் , தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம் . கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்.

பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில் , பிறருக்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது , பிறர் உதவி என்பது கூறிய ஆயுதம் போன்றது. தவறி மாட்டிக் கொண்டால் , அதற்கு நாமே பலியாகி விடுவோம் .

விழிப்பு நிலையோடு தான் , நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறருக்கு உதவ வேண்டும் . நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக் கூடும் என்று விசாரணையை துவக்குகிராரோ அதே போல் நம்மிடம் உதவி நாடுபவரை " இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது " என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு , பிறகு நல்லவன் தன என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.

உலகக் கடமையில் ஈடுபட்டுள்ள நமக்குப்பல பொறுப்புக்கள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும்.

No comments:

Post a Comment