தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
* கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
* குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
* சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் பெண்களின் கருப்பை ஆரோக்கியமடைவதாகவும், இதனால் தான் திருமணம் முடிந்த பெண்களை நெற்றியின் வகுட்டில் பொட்டு வைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் நெற்றியில் உள்ள பல நரம்புகளை குங்குமம் தூண்டுவதன் மூலம் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்றும் சொல்லப் படுகிறது.

No comments:
Post a Comment